முள்ளங்கியில் ஒருவித காரத்தன்மை நிறைந்திருக்கும். இதில் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும் பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இருந்த போதிலும் இதை பெரும்பாலானோர் விரும்பி உண்ணுகின்றனர். இப்போது நாம் முள்ளங்கியை கொண்டு சுவையான பச்சடி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இப்படி செய்தால் முள்ளங்கியை பிடிக்காதவர்களும் விரும்பி உண்ணுவர். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். 


தேவையான பொருட்கள் 


முள்ளங்கி - 2
கெட்டி தயிர்-100 மி.கி
பாசிப்பருப்பு -50 கிராம்
வெங்காயம்-1 
பச்சை மிளகாய் -2
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை 
கடுகு- 1 ஸ்பூன் 
உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
மல்லித்தழை-1 ஒரு கைப்பிடி அளவு
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை


முள்ளங்கியை கழுவி சுத்தம் செய்து அதன் தோலினை நீக்கி விட வேண்டும்.


முள்ளங்கியை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.


வெங்காயம், பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 


பாசிப்பருப்பை வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


1 மணி நேரம் கழித்து பாசிப்பருப்பை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு கிண்ணத்தில் துருவிய முள்ளங்கி, ஊறிய பாசிப்பருப்பு,  நறுக்கி வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 


அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து, சூடானதும் பின் அதில் கடுகு சேர்த்து பொரிந்ததும் உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும். 


இந்த தாளித்த பொருட்களை கிண்ணத்தில் இருக்கும் முள்ளங்கியில் சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.


இறுதியாக  தயிர், உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.


கடைசியாக இதில் மல்லித்தழையை தூவி பரிமாறினால் சுவையான முள்ளங்கி பருப்பு பச்சடி தயார்.


முள்ளங்கியின் பயன்கள் 


முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான செயல்முறையைத் தூண்டும்.


முள்ளங்கி சாறு குடல் திசுக்களை பாதுகாக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.


பித்த சுரப்பை ஒழுங்குபடுத்தவும், கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் முள்ளங்கி உதவும் என சொல்லப்படுகிறது. 


உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடல் நலனை பாதுகாக்க முள்ளங்கி உதவுகிறது. 


மலச்சிக்கல் மூலக்கடுப்பு போன்றவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் என சொல்லப்படுகிறது. 


சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குணமாக்க முள்ளங்கி உதவும் என சொல்லப்படுகிறது. 


மேலும் படிக்க 


Carrot Sago Payasam: கேரட் ஜவ்வரிசி பாயாசம்! இப்படி செய்தால் சுவை அசத்தலாக இருக்கும்!


Banana Bonda: தித்திப்பான வாழைப்பழ போண்டா! சூப்பர் சுவையில் அசத்தலாக செய்வது இப்படித்தான்!