தேவையான பொருட்கள்




200 கிராம் கோவைக்காய்

1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய் தூள்

1/2 டீஸ்பூன் சாம்பார் தூள்

1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

1/2 டீஸ்பூன் ஆம்சூர் பவுடர்

தேவையான அளவுஉப்பு

250 மி.லி எண்ணெய் பொரிப்பதற்கு

செய்முறை 



கோவைக்காயை கழுவி, நன்கு துடைத்து விட்டு, நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்





கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், நறுக்கி வைத்துள்ள கோவைக்காய் துண்டுகளை சேர்த்து, பொரித்து எடுக்க வேண்டும். 



பின்னர் கடாயை அடுப்பில் வைத்து சூடானதும்,ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொரித்தெடுத்த கோவைக்காயை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்க வேண்டும்.



பின்பு காஷ்மீர் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மாங்காய் பவுடர், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, இறக்கினால் கோவைக்காய் வறுவல் தயார்.



இதை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதன் மீது நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம். 


கோவைக்காயின் பயன்கள் 


கோவக்காய் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. செரிமானத்திற்கு தேவையான நார்ச்சத்து இதில் மிகுதியாக உள்ளது. எனவே இது மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது. மேலும் இது குடல், இரைப்பை கோளாறுகளை சரி செய்யும் என கூறப்படுகிறது. நார்ச்சத்தானது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மென்மையாக வைத்துக் கொள்ள உதவும் என சொல்லப்படுகிறது.


வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிப்பதன் மூலம் எடை இழப்பை தடுக்க கோவைக்காய் உங்களுக்கு உதவுகிறது. மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் கோவைக்காய் குறைக்கும் என கூறப்படுகிறது. கோவைக்காயின் வேர் உடல் பருமனை தடுக்கும் பண்பு கொண்டது என்று ஆராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. 


கோவைக்காயில் அதிக இரும்பு சத்து உள்ளது. எனவே, உங்கள் உணவில் கோவைக்காய் சேர்த்துக்கொள்வது உங்களை உட்புறமாகவும், வெளிப்புறமாகவும், ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் என கூறப்படுகிறது. 


இது உடலில் உள்ள ஆற்றல் அளவை அதிகரித்து வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குப்படுத்தும் என கூறப்படுகிறது. 


கோவைக்காயில் சபோனின், அல்கலாய்டுகள், ஸ்டெராய்டுகள், ஃப்ளேவோனாய்டுகள் மற்றும் கிளைகோசைடுகள் போன்றவை அதிகமாக உள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனாபிலாக்டிக் நிலைமைகள் மற்றும் பிற அலர்ஜிகளிலிருந்து உடலுக்கு பாதுகாப்பை அளிக்கும் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க


Kadalai Paruppu Payasam: கடலை பருப்பு பாயாசம் அசத்தலாக செய்வது எப்படி?


Pallipalayam Mushroom Fry: புரதச்சத்து நிறைந்த காளான்.. பள்ளிப்பாளையம் காளான் வறுவல் செய்முறை இதோ..


Sugar Cane Payasam: பொங்கல் ஸ்பெஷல் ரெசிபி! சுவையான கரும்பு பாயாசம் செய்முறை இதோ