தேவையான பொருட்கள் 


பச்சை பட்டாணி - 1 1/2 கப்,  எண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன் , சோம்பு - 1 டீஸ்பூன் , பட்டை - 1 சிறிய துண்டு , பெரிய வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது , தக்காளி - 3 நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, முந்திரி - 10, காஷ்மீரி மிளகாய் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் , மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் , கரம் மசாலா - 2 டீஸ்பூன் , தயிர் - 1/4 கப் , உப்பு - தேவையான அளவு,  சர்க்கரை - 1 டீஸ்பூன்.


செய்முறை


தக்காளி, முந்திரி, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தயிர் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சேர்த்து சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். 


நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து  சற்று பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 


பின்பு அரைத்து வைத்துள்ள தக்காளி மசாலாவை இத்துடன் சேர்த்து,  சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, எண்ணெய் மேலே மிதந்து வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். 


எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, பச்சை பட்டாணியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீரை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் குறைவான தீயில்  பட்டாணியை வேக வைத்து இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி மசாலா ரெடி.


பச்சை பட்டாணி நன்மைகள் 


மனிதனில் உடலுக்கு ஆதாரமாக விளங்குவது எலும்புகள் தான். எனவே எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள வைட்டமின் கே சத்து, எலும்புகள் மாற்றும் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைப்பதாக கூறப்படுகிறது. 


மனிதர்களுக்கு வயது ஆக, ஆக தோலில் சுருக்கங்கள் ஏற்பட ஆரம்பிக்கும். நமது உடலில் மக்னீசியம் சத்து குறைவது தான் இதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. பச்சை பட்டாணியில் மக்னீசியம் நிறைந்துள்ளது. பச்சை பட்டாணியை அதிகம் சாப்பிடுவதால் தோல் சுருக்கம் ஏற்படுவதை தாமதப்படுத்தும் என சொல்லப்படுகிறது. 


நம் உணவில் தினசரி நார்ச்சத்தை சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். இந்த நார்ச்சத்து நாம் உண்ணும் உணவு எளிதில் செரிமானமாக உதவுவதுடன், மலச்சிக்கல், வயிறு கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. பச்சை பட்டாணியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான கோளாறுகளை தடுக்கும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க 


Rajma Masala : சாதம்.. தோசை.. இட்லிக்கு ஏற்றது.. புரதச்சத்து நிறைந்த ராஜ்மா மசாலா.. ரெசிப்பி இதோ..


Thakkali Kadaiyal:இட்லி, தோசைக்கு சூப்பர் காம்போ...சுவையான தக்காளி கடையல் செய்முறை...