தேவையான பொருட்கள் 


கடலை பருப்பு - ஒரு கப், நெய் - தேவையான அளவு, தண்ணீர் - 3 கப், ஜவ்வரிசி  ரெண்டு ஸ்பூன், வெல்லம் -100 கிராம், தேங்காய் பால் - இண்டு கப், ஏலக்காய் தூள் -கால் ஸ்பூன், தேங்காய் துண்டுகள் - அரை கைப்பிடி, முந்திரி பருப்பு - 10, உலர் திராட்சை - சிறிதளவு.


செய்முறை


முதலில் அரை மூடி தேங்காயை நன்கு துருவி, மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து இரண்டு கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.


தண்ணீர் அதிகமாகவும் சேர்க்க கூடாது. பின்னர் தேங்காயை சிறு சிறு துண்டுகளாக மெல்லியதாக பாயாசத்திற்கு போடுவது போல் நறுக்கி வைத்துக் கொள்ளு வேண்டும்.


ஒரு குக்கரில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும், 1 கப் கடலைப் பருப்பை சேர்த்து  நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும்.


கடலை பருப்பு நன்கு பொன்னிறமாக வறுபட்டதும், மூன்று கப் தண்ணீர் சேர்க்க வேண்டும்.


குக்கரை மூடி, ஐந்து விசில் வந்ததும் இறக்கி விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் 100 கிராம் அளவிற்கு பொடித்த வெல்லத்தை சேர்த்து அரை கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து, நன்கு கரையும் வரை கொதிக்க விடவும்.


வெல்லம் கரைந்ததும் அடுப்பை அணைத்து அதை வடிகட்டி பருப்புடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


பருப்புடன் வெல்லப்பாகு சேர்ந்ததும் கொஞ்சம் ஏலக்காய் தூள் வாசனைக்கு தூவி கொள்ளவும்.


இரண்டாவதாக எடுத்த தேங்காய் பாலை ஒரு கப் அளவிற்கு ஊற்றி கொதிக்க விட வேண்டும். பருப்பு தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கொதித்து வரும் பொழுது, அடுப்பை அணைத்து விட வேண்டும்.


அடுப்பை அணைத்த பிறகு நீங்கள் முதலில் எடுத்த தேங்காய் பாலை ஒரு கப் அளவிற்கு சேர்க்க வேண்டும்.(முன்னதாக சேர்த்தால் பால் திரிய வாய்ப்புண்டு)


பின்னர் ஒரு சிறிய அளவிற்கு நெய் சேர்த்து சூடானதும் அதில் நீங்கள் நறுக்கி வைத்துள்ள தேங்காய் துண்டுகளை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் அதனுடன் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப முந்திரி பருப்புகளையும், உலர் திராட்சைகளையும் பொடித்து பொன்னிறமாக சிவக்க வறுத்து பாயாசத்துடன் சேர்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான் சுவையான கடலைப்பருப்பு பாயாசம் தயார். 


மேலும் படிக்க 


Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...