பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கரும்பு தான். கரும்பை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். தற்போது நாம் சுவையான கரும்பு பாயாசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போறோம். 


தேவையான பொருட்கள் 


கரும்பு ஜூஸ்- 500 மிலி, அரிசி- 1/4 கப் , நெய்- 2 தேக்கரண்டி, முந்திரி- ஒரு கைப்பிடி அளவு, திராட்சை- ஒரு கைப்பிடி அளவு,  பால் - 5 தேக்கரண்டி




செய்முறை


முதலில் ஒரு பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் நெய்யை சேர்த்து, சூடானதும் முந்திரி , திராட்சையை சேர்த்து வறுக்க வேண்டும். முந்திரி பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும்.









முந்திரியை ஒரு தட்டில் எடுத்து வைத்து விட்டு,  கரும்பு சாறை அதே பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். கரும்பு சாறு நன்கு கொதிக்கும் போது அதில் பாலை சேர்க்க வேண்டும். 


இப்போது பால் கரும்பு சாறு கலவையில் தயாராக வைத்துள்ள அரிசியை சேர்க்க வேண்டும். அரிசி நன்கு வெந்து வரும் வரை வேக வைக்க வேண்டும்.  நெய்யில் வறுத்து  வைத்துள்ள முந்திரி, திராட்சையை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும்.





அவ்வளவுதான் சுவையான கரும்பு பாயாசம் தயார். 

கரும்பு நன்மைகள் 


கரும்பு சாறில் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் இரும்பு உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி-காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளன.


கரும்பில் காணப்படும் இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். கரும்பு சாறு குடிப்பது உங்களை அதிக புத்துணர்வுடன் உணர வைக்கும்.


கரும்பு சாற்றில் செரிமானத்திற்கு உதவும் இயற்கை என்சைம்கள் உள்ளன. இது மலச்சிக்கலைத் தடுக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.


கரும்பு சாறு நீரேற்றத்தின் சிறந்த மூலம். உடற்பயிற்சிக்கு பிறகு கரும்பு சாறை உட்கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்வை தரும். 


மேலும் படிக்க 


Kavuni Arisi pongal: ஊட்டச்சத்து நிறைந்த பொங்கல்.. கருப்பு கவுனி அரிசியில் இந்த மாதிரி செய்து அசத்துங்க...


Karkandu Sadham: பொங்கல் ஸ்பெஷல்.. தித்திப்பான கற்கண்டு சாதம் டக்குன்னு செஞ்சு முடிக்கலாம்.. ரெசிப்பி இதோ


Munthiri Kothu: புரோட்டீன் நிறைந்த முந்திரி ஸ்நாக் ரெசிபி! முந்திரி கொத்து செய்வது இப்படித்தான்!