தேவையான பொருட்கள்


காளான் - 200 கிராம், தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் - 5 ,  கறிவேப்பிலை - சிறதளவு, சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது),  இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன், தக்காளி - 1 (நறுக்கியது),  தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது), மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மல்லித் தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன், உப்பு - சுவைக்கேற்ப பயன்படுத்தலாம்.


செய்முறை


முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 


பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.


பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும். 


பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்கவேண்டும்.


பின் அதில் 1/4 கப் தண்ணீரை சேர்த்து, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். 


காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.


காளான் பயன்கள் 


காளான் புரதத்தின் சிறந்த மூலமாகும். இறைச்சியை விரும்பாதவர்கள்,  புரதத் தேவையை பூர்த்தி செய்ய உணவில் அடிக்கடி காளான் சேர்த்துக் கொள்ளலாம். காளான்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதியான அமினோ அமிலங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 


குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காளான் உதவுவதாக கூறப்படுகிறது.


காளான்களில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது . மேலும் இதில் உள்ள புரத உள்ளடக்கம் உங்கள் உடல் எடையை சமப்படுத்த உதவும் என கூறப்படுகிறது. காளான் தாமிரத்தின் நல்ல மூலப்பொருளாகும். முடி வளர்ச்சிக்கும் கொலேஜன் உருவாவதற்கும் தாமிரம் அவசியம். எனவே, காளான் பளபளப்பான சருமத்தையும் ஆரோக்கியமான கூந்தலையும் பெற உதவும் என கூறப்படுகிறது.


மேலும் படிக்க 


Amritsari Prawn Fry : சுவையான அம்ரித்சாரி இறால் பொரியல்.. ட்ரெண்டிங்கில் இதுதான் இப்போ களைகட்டுது..


Ladies Finger Fry :ஞாபக சக்தியை அதிகரிக்கும் வெண்டைக்காய்...மொறு மொறு ஃப்ரை இப்படி செய்து பாருங்க...


Pongal Sweets: பூசணிக்காய், பாகற்காய், பிஸ்தாவில் பர்ஃபி செய்வது எப்படி? பொங்கலுக்கு செஞ்சு அசத்துங்க!