சீரக சம்பா என்ற பெயரைக் கேட்டவுடனேயே நமக்கு பிரியாணியும் அதன் மணமும் ஞாபகத்தில் வந்துவிடும். சேர்க்கப்படும் பொருட்களின் வாசனையை அப்படியே உருஞ்சிக்கொள்வதாலேயே இந்த அரிசியைப் பெரும்பாலும் பிரியாணி சமைக்கும்போது நாம் பயன்படுத்துகிறோம்.
இந்த அரிசியின் பெயர் சீரகத்திலிருந்து கிடைக்கிறது, பார்ப்பதற்கு சீரகத்தின் அளவையும் வடிவத்தையும் ஒத்திருப்பதால் இந்த பெயர். சம்பா என்பது இந்த அரிசி பயிரிடப்படும் காலத்தைக் குறிக்கிறது (ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை) நாகப்பட்டினம், திருச்சி மற்றும் தஞ்சாவூரின் குறிப்பிட்ட மாவட்டங்களில் இந்த அரிசி பயிரிடப்படுகிறது. உலகின் புவியியல் குறியீட்டைப் பெற்ற தமிழகத்தின் முதல் பயிர் இது தான். நிபுணர்கள் பலரும் வெள்ளையூட்டப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்ட அரிசிக்கு மாற்றாக இதைப் பரிந்துரைக்கின்றனர். இதன் பயன்களைப் பார்க்கலாம்.
- செலினியம்
இதில் இருக்கும் செலினியம் என்னும் சத்து குடல் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. மேலும் இதில் நிரம்பியிருக்கும் நார்ச்சத்து பொதுவாகவே குடலின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.
- ஃபைட்டோ நற்குணங்கள்
இவை மார்பகப் புற்றுநோயை தடுக்கும், மேலும் இதயத்தை ஆரோக்கியப்படுத்தும்.
- கொழுப்பைக் குறைக்கும்
சீராக சம்பா அரிசியில் இருக்கும் எண்ணெய் உடலின் கெட்ட கொழுப்பைக் கரைக்கும். மேலும் இவற்றில் இருக்கும் நார்ச்சத்து உடலில் இருக்கும் நல்ல கொழுப்பை வளர்க்கும். ஆதலால், நீரிழிவு குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு இது நல்ல மாற்று.
- நார்ச்சத்து நிறைந்தது
நார்ச்சத்து மிகுந்திருப்பதால் நம்மால் அதிகம் உண்ண முடியாது, ஆகையால் உடலுக்குப் போகும் கலோரிகள் இயல்பாகவே குறையும், மேலும் சீரணத்திற்கு உதவி புரியும், மல சிக்கல்களை சரி செய்யும்.
- ஆண்டிஆக்சிடன்ட் நிறைந்தது
இதய நோய்களில் இருந்து உடலை வலுப்படுத்தும். மேலும் தைராய்டு சுரப்பில் ஏற்படும் மாறுதல்கள், குறைபாடுகளை நிவர்த்தி செய்யும்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்