கோடை வந்துவிட்டாலே, சில்லுன்னு எதாவது சாப்பிடலாம்னு தோறும். அதுவும் ஐஸ் கிரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரின் முகத்திலும் ’ஐஸ் கிரீம்’ என்றதும் மகிழ்ச்சி ஒட்டிக்கொள்ளும். எவ்வளவு பெரிய விருந்தாக இருந்தாலும் சரி...சாப்பிட்டு முடித்தவுடன், பல வகை இனிப்புகள் இருந்தாலும், ஐஸ்க்ரீம்தான் அங்கே ராஜா!


அந்த வகையில் sorbet என்பது வீட்டிலேயே பழங்களை வைத்து  தண்ணீர் சேர்த்து தயாரிப்பது. குளு… குளு … ஐஸ் தயாரிப்பதற்கான ரெசிபி இதோ!




தேவையானவை:



  • நுங்கு - 10

  • தேன் – அரை கப் அல்லது சர்க்கரை தேவையான அளவு

  • எலுமிச்சைச் சாறு- ஒரு டேபிள் ஸ்பூன்

  • ஏலக்காய் – இரண்டு

  • தண்ணீர்- தேவையான அளவு


செய்முறை:


நுங்கின் மேல் தோலை முற்றிலுமாக நீக்கிவிட்டு. பின்னர், ஒரு மணி நேரம் ஃபிரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியே எடுத்து மிக்சியில் அரைத்து, மீண்டும் ஃபிரீஸரில் வைத்து குளிர்விக்கவும். இதேபோல தொடர்ந்து நான்கு முறை செய்யவும். பிறகு, இதை நான்கு மணி நேரம் ஃபிரிட்ஜில் ஃபிரீஸ் செய்யவும். இது நன்றாக ஃப்ரீஸ் ஆகும்வரை ஃபிரிட்ஜில் வைக்கவும். ஐஸ் ஆக தயாரானதும், அதில் ஒரு ஸ்கூப் எடுத்து அதன் மீது பொடித்த ஏலக்காய் தூளை சேர்க்கவும்.


மதியம் சாப்பிட்டவுடன் அல்லது, வெயில் அலைந்து திரிந்து வந்ததும் சாப்பிட ஏற்ற, இயற்கையாக தயாரிக்கப்பட்ட நுங்கு சார்பட்!


நுங்கின் நன்மைகள்:


நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைத்து உடலிக்கு குளிர்ச்சியைத் தருகிறது.


நுங்கு உடலில் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது.


நுங்கு உள்ள சத்துக்கள் மலச்சிக்கலை தீர்வாக அமையும்.


நுங்கில் உள்ள தண்ணீர் சத்து, கோடை உங்கள் தாகத்தை தீர்த்து, உடலில் நீர்ச்சத்தின் அளவை பாதுகாக்கும்.


பொதுவாக, சீசனல் பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. வெயில் காலத்தில் மட்டுமே கிடைக்க கூடிய பழங்களைச் சாப்பிடுவது உடலுக்கு ரொம்பவே நல்லது. அந்தவகையில் நுங்கில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண