திருச்சி மாவட்டத்தின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் (Coaching cum Guidance Centre for SC & ST) காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான அறிவிப்பினை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை (Department od Employment and Training) வெளியிட்டுள்ளது.


இன சுழற்சி அடிப்படையில் பொது பிரிவினர் முன்னுரிமையற்றவர்கள் (General Turn General Non-Priority) இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பணி விவரம்: 


அலுவலக உதவியாளர்


கல்வித்தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க  எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


இப்பணியிடத்திற்கு 01.07.2022-இன் படி, குறைந்தபட்ச வயதாக 18 வயதை நிரம்பியவராக இருக்க வேண்டும்.  பொதுப்பிரிவினர் 32 வயதிற்கு மிகாமலும், பிற்படுத்தப்பட்ட பிரிவினர் 34 வயதிற்கு மிகாமலும், பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர் 37 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


இந்தப் பணிக்கு விண்னப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்பங்களை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை  உதவி இயக்குநர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்றுவிப்பு மற்றும், தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கண்டோன்மென்ட், திருச்சிராப்பள்ளி - 620 001 என்ற முகவரியில் நேரடியாக சென்று சமர்பிக்கலாம் அல்லது பதிவு அஞ்சலில் (Registered post ) அனுப்பலாம்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி தேதி: 15.11.2022 மாலை 5.45 மணி நேரம்


முகவரி:


Assitant Directior,
Coaching cum Guidance Centre for SC & ST, 
Kasthuri Hall Road, 
Bharathithasan Salai, 
Trichy Taluk Office (West) Back,
 Contonement, Trichy - 620 001


தொடர்பு எண் - 0431-2422520


இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://tnvelaivaaippu.gov.in/index.html என்ற லிங்கை கிளிக் செய்து காணலாம்.




மேலும் வாசிக்க..


Job Alert: நீலகிரி வெலிங்டன் கண்டோன்மெட் போர்டில் வேலைவாய்ப்பு.. 12-ஆம் வகுப்பு தேர்ச்சியே போதும்.. இதோ விவரம்..


IAF Recruitment 2022: இந்திய விமானப்படையில் பணியாற்ற ஒரு அருமையான வாய்ப்பு..மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க...


ESIC Recuritment: சென்னை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; நேர்காணல் நடைபெறும் தேதி இதுதான்!