TN ESIC Recruitment 2022:
தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (TN ESIC-Tamil Nadu Employee's State Insurance Corporation) காலியாக உள்ள Senior Resident, Assistant Professor பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணி விவரம்:
Senoir Resident,
Assitant Professor
Child Psychologist
Dermatology
மொத்த பணியிடங்கள் : 61
கல்வித் தகுதி:
MBBS, M.A., M.Sc., M.Phil, M.D., M.S., உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 67 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக டிமாண்ட் டிராஃப்டாக (D.D.- ‘ESI Fund Account No.1’ என்ற பெயரில்) செலுத்த வேண்டும். பழங்குடியினர்/ பட்டியலின பிரிவினர், மகளிர், முன்னாள் அரசு ஊழியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
பணி இடம்: சென்னை
எப்படி விண்ணப்பிப்பது?
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க சுயவிவர குறிப்புடன் தேவையான கல்வி சான்றிதழ் உடன் நேர்காணலின் கலந்து கொள்ள வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு லெவல் -11 ன் படி அடிப்படை ஊதியமாக ரூ.67,700 மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும், ரூ.1,40,326 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் நாள் : நவம்பர், 2, 2022, / நவம்பர், 3, 2022/ நவம்பர், 4, 2022
இந்தப் பணிக்கு ஆப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Child Psychology, Dermatology பணிகளுக்கு நேர்காணல் நவம்பர், 5, 2022 அன்று நடைபெறுகிறது.
விண்ணப்பிக்கும் முறை என்ன?
தமிழ்நாடு பணியாளர் மாநில காப்பீட்டுக் கழகம் வேலைவாய்ப்பு 2022-க்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.esic.nic.in/ -க்கு செல்லவும். அதில் பணி குறித்த முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளுங்கள்.
அதிலிருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.
அறிவிப்பின் முழு விவரத்தை https://www.esic.nic.in/attachments/recruitmentfile/46819b86a06708e594e95dc6f76be4c3.pdf என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.
ESIC-இன் வேலைவாய்ப்பு தகவல் பக்கம் https://www.esic.nic.in/recruitments என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
முகவரி:
ESIC Medical College and Hospital,
Ashok Pillar Road,
K.K. Nagar,
Chennai- 78
மேலும் வாசிக்க..
TNPSC Job: ரூ.37,700 ஊதியம்; மீன்வள நலத்துறையில் ஆய்வாளர் பணி; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
SBI CBO Recruitment : வங்கியில் வேலை; மாதம் ரூ.36 ஆயிரம் ஊதியம்; எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ!