சென்னை ராயப்பேட்டையில் உள்ள அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் கோயிலில் காலியாக உள்ள கணினி அலுவலர், மின் பணியாளர், அர்ச்சகர், ஓதுவர், சுயம்பாகி உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை  புதிய வேலைவாய்ப்பு அறிப்பை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்:

கணினி அலுவலர்

மின் பணியாளர்

அர்ச்சகர்

ஓதுவார்

சுயம்பாகி

மேளக்குழு  (நாதஸ்வரம் பணிக்கு)

பகல் காவலர் 

இரவு காவலர்

துப்புரவாளர்

கல்வித் தகுதி:

கணினி அலுவலர் பதவிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் கணினி அறிவியலில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

மின் பணியாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தில் ஐ.ஐ.டி. சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மின் உரிமம் வாரியத்தின் B- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

அர்ச்சகர் பணிக்கு தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். அரசு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

ஓதுவார் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனங்களால் நடத்தப்படும் வேதராப்பாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்.

மேளக்குழு பணிக்கு தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சமய நிறுவனம் அல்லது தமிழ்நாடு அரசு நிறுவனம் அல்லது பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட இசைப்பள்ளியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 

 பகல் காவலர் பணிக்கு தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருந்த வேண்டும்.

இரவு காவலர் பணிக்கு தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். காவலர் பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருந்த வேண்டும்.

துப்புரவாளர் பணிக்கு தமிழ் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். துப்புரவு பணி செய்ய தகுந்த உடல் ஆரோக்கியத்துடன் இருந்த வேண்டும்.

ஊதிய விவரம்:

கணினி இயக்குபவர் - ரூ.15,300 - ரூ.48,700 

மின் பணியாளர் ரூ.12,600 - ரூ.39,900

அர்ச்சகர் நிலை 2 -  ரூ.13,200 - ரூ.39,900

 ஓதுவார் - ரூ.12,600 - ரூ.39,900 

சுயம்பாகி  ரூ.13,200 - ரூ.41,800 

 மேளக்குழு நாதஸ்வர பணிக்கும் மட்டும் - ரூ.15,300 - ரூ.48,700 

 பகல் காவலர்  ரூ.11,600 - ரூ.36,800 

 இரவு காவலர் -  ரூ.11,600 - ரூ.36,800

 துப்பரவாளர் -  ரூ.10,000 - ரூ.31,500 

விண்ணப்பிப்பது எப்படி?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் சுயவிவர குறிப்புடன் சேர்த்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்பலாம் அல்லது நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்

.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

 செயல் அலுவலர்,

அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வர் திருக்கோயில்,

ராயப்பேட்டை, 

சென்னை-14

விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://hrce.tn.gov.in/hrcehome/index.phpஅதிகாரப்பூர்வ வலைதளத்தை காணவும்.

அறிவிப்பின் முழு விவரத்தை அறிய https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/143/document_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.