நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India) உள்ள 5,000க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. Junior Associate (Customer Support & Sales) பணிக்கு நாடு முழுவதும் செயல்பட்டுவரும் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகளில் உள்ள மொத்தம் 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்னப்பிக்க வேண்டும்.
அகமதாபாத், பெங்களூர், சென்னை, போபால், கொல்கத்தா, புவனேஷ்வர், புதுடெல்லி, ஜெய்பூர், மஹாராஷ்டிரா, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க அந்தந்த மாநில உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Junior Associate (Customer Support & Sales)
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப் பட்ட நிறுவனத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு டிகிரி படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்:
மாத சம்பளமாக ரூ.19,900 வழங்கப்பட உள்ளது.
வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் 01.08.2022 தேதியின் படி வயது 20 வயது முதல் 28 வயதிற்குள்ளவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பத்தாரர்கள் ரூ. 750/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டிய/ பழங்குடியினர் பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர், ஆகியோருக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.09.2022
அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://sbi.co.in/documents/77530/25386736/060922-JA+2022-Detailed+Advt.pdf/3a163d20-b15a-2b83-fe54-1e8dba091220?t=1662465793728 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
அதிகாரப்பூர்வ இணையதளம்- https://www.onlinesbi.sbi/
ஆல் தி பெஸ்ட்.
மேலும் வாசிக்க..
NEET UG Result 2022: வெளியான நீட் தேர்வு முடிவுகள்; மதிப்பெண்களைத் தெரிந்துகொள்வது எப்படி?
Student Suicide: நீட் அச்சத்தால் பலியாகும் உயிர்கள்.. என்ன தீர்வு? நிபுணர்கள் சொல்வது என்ன?