சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (Chennai Petroleum Corporation Limited) நிறுவனத்தில் மெக்கானிக்கல், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், இன்ஸ்ருமெண்டேசன் உள்ளிட்ட பிரிவுகளில் பொறியாளர்  பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியுடையவர்கள் இம்மாதம் 21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி விவரம்:

இஞ்சினியர் பணிக்கான 22 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

 

கல்வித் தகுதி:

அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கு, அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகங்களில்  பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்களை பொறியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

மாக்கெட்டிங் துறையில் எம்.பி.ஏ. படித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஊதியம்:

இந்தப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்  IDA Pay Scale-ன் படி, மாதத்திற்கு ரூ. `50,000-1,80,000 வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது,  Grade ‘A’ பணிகளுக்கான அடிப்படை ஊதியம் வழங்கப்படும்.   

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். பட்டியல்/ பழங்குடியின பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

முகவரி:

Chennai Petroleum Corporation LimitedNew No:536, Anna Salai,

Teynampet Chennai 600 018

தொடர்புக்கு:

044-24349833, 24349542, 25940367

அறிவிப்பின் முழு விவரம்:

https://cpcl.co.in/wp-content/uploads/2022/08/Advertisment-Officer-2022-Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.


மேலும் வாசிக்க..

PG Admission: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகள்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

IRCTC: இந்திய இரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்தில் வேலைவாய்ப்புகள்; கூடுதல் விவரம் இதோ..

Gail India Recruitment : கெயில் இந்தியா நிறுவனத்தில் 289 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு! எப்படி விண்ணப்பிப்பது? விவரங்கள்!