தமிழகத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் துயரங்களும் தற்கொலைக்கு முயற்சிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நீட் தேர்வுக்கு முன்னதாகவும் தேர்வு முடிவுகளின்போதும் மாணவர்கள் பலியாகும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன. 


தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குலசேகர மங்கலம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி ராஜலட்சுமி. 3 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்த ராஜலட்சுமி, அப்போதில் இருந்து நீட் தேர்வை எழுதி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர், இந்த ஆண்டு தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்து, நம்பிக்கையுடன் 3ஆவது முறையாகத் தேர்வை எழுதி இருந்தார்.  எனினும் தேர்வு முடிவு அச்சம் காரணமாக மாணவி ராஜலட்சுமி திடீரெனத் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். 


முன்னதாக, நீட் தேர்வு அச்சத்தால் சென்னை சூளைமேடு தனுஷ், ஓசூர் முரளிகிருஷ்ணா, அரியலூர் நிஷாந்தி ஆகிய மூன்று மாணவர்கள் நடப்பு ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர். 


நீட் தேர்வு மற்றும் முடிவுகளை எதிர்கொள்ள முடியாமல் ஆண்டுதோறும் மாணவர்கள் பலியாவது தொடர் கதையாகி வருகிறது.


இதற்கு என்னதான் தீர்வு? நிபுணர்கள் சிலரிடம் ’ABP நாடு’ சார்பில் பேசினோம்.


மருத்துவர் சரண்யா ஜெயக்குமார், கல்வி உளவியலாளர்


’ சில’க் குழந்தைகள் குறைத்துக்கொள்ள வேண்டும். அவை உங்களின் நேரத்தைத் தின்பதை உணரவேண்டும். ஒரு நாளைக்கு அதிகபட்சம் அரை மணி நேரம், 45 நிமிடங்கள் மட்டுமே பயன்படுத்துவேன் என்று வரையறுத்து, பயன்படுத்த வேண்டும். 'நாம் இறந்துவிட்டால், நமது குடும்பத்தினரைப் பிறர் எப்படி நடத்துவர்?' என்று யோசித்துப் பார்க்க வேண்டும். 




சக மாணவர்களில் யாராவது தனிமையாக, சோர்வாகக் காணப்பட்டால், அவர்களிடம் சென்று பேசி ஊக்கப்படுத்த வேண்டும். தயக்கமின்றி 1098 என்ற எண்ணை, எந்த நேரத்திலும் அழைத்துப் பேசலாம்’’. 


தேவநேயன், குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர்


’’பள்ளி பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்ப்பது அவசியம். பெற்றோர்கள், தனியார் பள்ளியில் அடுக்குமாடிக் கட்டிடம் இருக்கிறதா, கண்ணாடி மாளிகை உள்ளதா, அபாகஸ், கணினி வகுப்புகள் உள்ளதா என்று பார்க்கும் முன், பள்ளி பாதுகாப்பாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களால் அணுக முடிந்தவர்களாக... குழந்தை நேயத்துடன் இருக்கிறார்களா என்று பார்க்கவேண்டும். கூடுமானவரை குழந்தைகளை பள்ளி விடுதியில் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 




பள்ளிகளில் குழந்தை பாதுகாப்புக் கொள்கையை (Child Protection Policy) கட்டாயம் அமல்படுத்த வேண்டும். பள்ளிக்கு உள்ளே வருபவர்கள் யார், கட்டிடத்தின் நிலைத்தன்மை, பள்ளிக்கு வெளியே அழைத்துச்செல்லும்போது பாலியல் வன்முறை, விபத்து ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு, ஆசிரியர்களின் அணுகுமுறை என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை விவாதித்து, தீர்வுகளைத் தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். இதற்காகத் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழந்தை பாதுகாப்பு குழுக்களை உருவாக்க வேண்டும். இப்படி ஒன்று இருக்கிறது என்பதை பள்ளி அறிவிப்புப் பலகையில் ஒட்டிவைக்க வேண்டும். 


1098, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு எண் ஆகிய எண்களைத் தெளிவாகக் காட்சிப்படுத்த வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டிக்கு பதில், ஆலோசனைப் பெட்டியை, சிசிடிவி கேமரா இல்லாத இடத்தில் வைக்க வேண்டும்’’.


இவ்வாறு நிபுணர்கள் தெரிவித்தனர்.


*


அதேபோல, நீட் தேர்வின்போதும், முடிவுகள் வெளியாகும்போதும் அரசு தரப்பில் உளவியல் ஆலோசனை கட்டாயம் அளிக்கப்படும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.