சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் (National health mission) காலியாக உள்ள மருத்துவர்கள், பல்நோக்கு சுகாதார உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் வரும் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரம்
மருத்துவர்கள் - 28
பல்நோக்கு சுகாதார உதவியாளர்கள் - 28
உதவியாளர்கள் - 28
காலி பணியிடங்கள்
சேலம் மாவட்ட நகர்புற மருத்துவ நிலையங்களில் மருத்துவர்கள் பணிக்கு 28 காலி இடங்களும், பல்நோக்கு சுகாதார உதவியாளர்கள் பணிக்கு 28 காலி இடங்களும், உதவியாளர்கள் பணிக்கு 28 காலி இடங்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
- மருத்துவர்கள் பணிக்கு கல்வித்தகுதியானது குறைந்தது எம்பிபிஎஸ் முடித்திருக்க வேண்டும்.
- பல்நோக்கு சுகாதார பணியாளர் பணிக்கு கல்வித்தகுதியானது பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- உதவியாளர்கள் பணிக்கு கல்வித்தகுதியானது 8ஆம் வகுப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- மருத்துவர் பணிக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.60,000 வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணிக்கு மாம் ரூ.14,000 மற்றும் உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.8,500 தொகுப்பூதியமாக வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு விவரம் :
- மருத்துவர் பணிக்கு வயது வரம்பானது 40க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- பல்நோக்கு சுகாதாரப் பணியாளர், உதவியாளர் பணிகளுக்கு வயது வரம்பானது 50க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்வு செய்யப்படும் முறை
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2023/03/2023030149.pdf என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி
நிர்வாக செயலாளர்,
மாவட்ட நல்வாழ்வு சங்கம்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
பழைய நாட்டாண்மை கழக கட்டட வளாகம்
சேலம் மாவட்டம் - 636 001
இந்த முகவரிக்கு விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து மார்ச் 10ஆம் தேதி மாலை 5.30 மணிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.