தஞ்சாவூர்: 97 ஆண்டுகால வங்கி பாரம்பரியம் கொண்ட வணிக வங்கியான தனலட்சுமி வங்கியில் காலியாகவுள்ள இளநிலை அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அருமையான இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் 97 ஆண்டுகால வங்கி பாரம்பரியம் கொண்ட வணிக வங்கியான தனலட்சுமி வங்கியில் காலியாக உள்ள இளநிலை அலுவலர்கள் மற்றும் மேலாளர்கள் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விரைந்து விண்ணப்பத்தை அனுப்புங்கள்.
பணி: Junior Officer
தகுதி : ஏதாவதொரு பிரிவில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 31.3.2025 தேதியின்படி 21 முதல் 25-க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant Manager
தகுதி : ஏதாவதொரு பிரிவில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 21 முதல் 28-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மட்டும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர். தேர்வுகள் தொடர்பான அனைத்து விபரங்களும் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூரில் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
தேர்வு மையங்கள்: டில்லி, என்சிஆர், மும்பை, தாணே, நவி மும்பை, எம்எம்ஆர், அகமதாபாத், காந்திநகர், ஹைதராபாத், விஜயவாடா,குண்டூர், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.708. கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.dhanbank.com/careers என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.7.2025
முக்கிய குறிப்புகள்: ஆன்லைன் தேர்வுக்கான அழைப்புக் கடிதங்களைப் பதிவிறக்கம் செய்ய விண்ணப்பதாரர்கள் www.dhanbank.com/careers வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.
அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்குவதற்கான அறிவிப்பு மின்னஞ்சல்/SMS மூலமாகவும் அனுப்பப்படும். விண்ணப்பதாரர் தொடர்புடைய இணைப்பைக் கிளிக் செய்தவுடன், அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்குவதற்கான சாளரத்தை அணுகலாம். விண்ணப்பதாரர் (i) பதிவு எண்/பதிவு எண், (ii) கடவுச்சொல்/பிறந்த தேதி ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். விண்ணப்பதாரர் பதிவு செய்யும் போது வழங்கப்பட்டதைப் போலவே சமீபத்திய அடையாளம் காணக்கூடிய புகைப்படத்தை அழைப்புக் கடிதத்தில் ஒட்ட வேண்டும். மேலும் (i) அழைப்புக் கடிதம் (ii) அசல் அடையாளச் சான்று மற்றும் (iii) அசல் அடையாளச் சான்று ஆகியவற்றின் புகைப்பட நகல் மற்றும் (iii) அசல் அடையாளச் சான்றுகளுடன் தேர்வு மையத்தில் ஆஜராக வேண்டும்.
வரும் 12ம் தேதி கடைசி நாள் என்பதால் உடனே விண்ணப்பத்தை பதிவு செய்யுங்கள். தேர்வை எழுதி வெற்றி பெற்று வேலை வாய்ப்பை பெறுங்கள்.