இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில், காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 39 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த விவரங்களை காணலாம்.

பணியிடங்கள்

விஞ்ஞானி / பொறியாளர் (சிவில்) பணியிடங்களுக்கு 18 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி / பொறியாளர் (மின்சாரம்) பணியிடங்களுக்கு 10 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி / பொறியாளர் (ரெஃப்ரிஜிரேஷன் & ஏர் கண்டிஷனிங்) பணியிடங்களுக்கு 9 பேர் நிரப்பப்பட உள்ளனர்.

விஞ்ஞானி / பொறியாளர் (கட்டிடக்கலை) பணியிடத்திற்கு ஒருவர் நிரப்பப்பட உள்ளார்.

விஞ்ஞானி / பொறியாளர் (சிவில்) தன்னாட்சி அமைப்பு பணியிடத்திற்கும் ஒருவர் நிரப்பப்பட உள்ளார்.

கல்வித் தகுதித என்ன.?

இந்த பணிகளில் சேர்வதற்கு, பி.இ மற்றும் பி.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள துறைகள் சார்ந்த பிரிவில் பாடம் எடுத்து படித்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பவர்கள் 65 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிகழாண்டில் பி.இ., பி.டெக்., படிப்பை முடிக்க உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் சேர்வதற்கு விண்ணப்பிப்பவர்கள், 28 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம் எவ்வளவு.?

இந்த பணியிடங்களுக்கான சம்பளம் 56,100 ரூபாய் முதல் தொடங்குகிறது.

தேர்வு முறை

மேற்கண்ட பணியிடங்களக்க விண்ணப்பிப்பவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில், சென்னையில் இதற்கான தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூலை 16-ம் தேதி(16.07.2025).

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு.?

இஸ்ரேவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 750 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அதில் 500 ரூபாய் திருப்பி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பை படிக்க https://www.isro.gov.in/ICRB_Recruitment10.html என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.