தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தில் 3 காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
உள்கட்டமைப்பு சிறப்பு மேலாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - சுற்றுச்சூழலியல் பொறியியல் படிப்பில் முதுகலை பொறியியல் பட்டமோ அல்லது எம்.டெக் பட்டமோ பெற்றிருக்க வேண்டும் அல்லது பொது சுகாதார பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் - 8 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் - மாதந்தோறும் ரூபாய் 85 ஆயிரம்
சுற்றுச்சூழல் திட்ட துணை மேலாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - சுற்றுச்சூழல் திட்டம், சுற்றுச்சூழல் பொறியியல், கடல்சார் அறிவியல் படிப்பு அல்லது கடல்சார் பொறியியல்( மெரின் என்ஜினியரிங்) படிப்புகளில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும்.
அனுபவம் - 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் - மாதந்தோறும் ரூபாய் 75 ஆயிரம்
சமூக சிறப்பு மேலாளர்:
காலிப்பணியிடம் - 1
தகுதி - சமூகவியல் அல்லது சமூக அறிவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம் - 8 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
சம்பளம் - ரூபாய் 85 ஆயிரம் மாதந்தோறும்
வயது வரம்பு:
மேலே கூறிய இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதும் குறிப்பிடப்படவில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tngreencompany.com/ என்ற பக்கத்தில் சென்று தக்க ஆவணங்களுடன் இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
மேலே கூறிய இந்த 3 பணிகளுக்கும் விண்ணப்பிக்க இன்றே கடைசி ( 2.7.2025) நாள் ஆகும்.
தமிழ்நாடு பசுமை காலநிலை நிறுவனம் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பசுமையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் பிரதான குறிக்கோள் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதே ஆகும்.