மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உதவி வனப் பாதுகாவலர் பதவிகளுக்கான முதல் நிலைத் தேர்வுகள், கணினி வழித் தேர்வாக (COMPUTER BASED TEST) முறையே 20.04.2023 மற்றும் 03.05.2023 அன்று நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம்:
உதவி வனப்பாதுகாவலர் (தொகுதி 1A பணிகள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி - 1C பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுகள் கணினி வழித்தேர்வாக (Computer Based Test) நடத்தப்படவுள்ளது. இதன் காரணமாக 09,04.2023 அன்று நடைபெறவிருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 20.04.2023 (9.30 மமுதல் 12.30 வரை) 29 மாவட்டங்களில் நடைபெறும் என்றும், 30.04.2023 நடைபெறவிருந்த உதவி வனப்பாதுகாவலர் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 03.05.2023 (9:30 ம முதல் 12.30 வரை) 26 மாவட்டங்களில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர்
காலிப் பணியிடங்கள் பற்றிய விவரங்கள்
பதவியின் பெயர் மற்றும் பதவிக் குறியீட்டு எண் - மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் 2062
பணியின் பெயர் - தமிழ்நாடு பள்ளிக் கல்விப்பணி
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை - 11
ஊதியம்
ரூ.56900- ரூ.2,09,200 வரை
உதவி வனப்பாதுகாவலர் பணி
ஊதிய விவரம்:
இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்பட உள்ளது.
முதல்நிலைத் பாடத் திட்டம்: