Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 10,000-க்கு கீழ் குறைந்தது கொரோனா தொற்று
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கர்நாடகாவில் புதியதாக இன்று 5 ஆயிரத்து 983 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணி்கை 27 லட்சத்து 90 ஆயிரத்து 338 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 10 ஆயிரத்து 685 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 138 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 33 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று 10 ஆயிரத்து 448 என்று தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகிய நிலையில், இன்று 9 ஆயிரத்து 118 ஆக குறைந்துள்ளது. தமிழகத்தில் நீண்ட நாட்களுக்கு கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இன்று மட்டும் 210 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 1,227 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மட்டும் 22 ஆயிரத்து 720 பேர் குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் தலைநகரான டெல்லியில் கொரோனா தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இன்று மட்டும் டெல்லியில் புதியதாக 158 நபர்களுக்கு கொரோனா பாதிப்ப உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் கொரோனா வைரசால் 10 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் தற்போது 2 ஆயிரத்து 554 நபர்கள் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனாவால் தனிமைப்பபடுத்தப்பட்ட பகுதியில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தடுப்பூசி முகாமையும் தொடங்கி வைத்து மக்களுக்கு அறிவுரை கூறினார்.
ரஷ்யாவில் கொரோனா வைரசுக்கு எதிராக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்ஷின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலும் ஸ்புட்னிக்வி தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதையடுத்து, கடந்த மே மாதம் முதல் பயன்பாட்டில் உள்ள ஸ்புட்னிக் தடுப்பூசி ஹைதராபாத், மும்பை, பெங்களூர், கொல்கத்தா, சென்னை, டெல்லி உள்பட 9 நகரங்களில் தனியார் மருத்துவமனைகளில் மட்டும் செலுத்தப்பட்டு வருகிறது.
ஜூலை 31ம் தேதி சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என இந்திய தலைமை வழக்கறிஞர் கே. வேணுகோபால் இன்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், சிபிஎஸ்ஸ் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் திட்டத்தையும் உச்சநீதிமன்றத்திடம் சமர்பித்தார்.
கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு ‘திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை’ (Customized Crash Course programme for Covid 19 Frontline workers) நாளை காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், " நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். வீட்டு கவனிப்பு உதவி , அடிப்படை கவனிப்பு உதவி, மேம்பட்ட சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ சாதன உதவி ஆகியவற்றில் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படும்.
இந்த திட்டம், பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டம் 3.0-ன் கீழ் ரூ.276 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டம் ஆகும். இந்த பயிற்சி, சுகாதாரத்துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப, மருத்துவம் அல்லாத சுகாதார பணியாளர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கும்" என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய ஆய்வின்படி 2டிஜி மருந்தை கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்கும்போது அது சார்ஸ் கோவ் 2 வைரஸ் பல்கிப் பெருகுவதைத் தடுக்கிறது. அதுமட்டுமல்லாம் சிபிஇ (CPE) தொற்றால் ஏற்படும் செல் பாதிப்பைக் கட்டுப்படுத்துகிறது.
‛ஆல்ஃபா, பீட்டா, டெல்டா...’ எல்லா கொரோனாவையும் திறனாய் எதிர்கொள்ளும் 2டிஜி
தமிழ்நாட்டுக்கு 60 ஆயிரம் தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பு இல்லாததால் மாநிலத்தின் பல்வேறு மாவடங்களில் தடுப்பூசி போடப்படும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
Background
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,448 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டது. தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,14,335 ஆக சரிந்துள்ளது. ஒருநாள் கொரோனா இறப்பு எண்ணிக்கை 270. சிகிச்சை முழுமையாகப் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21,058-ஆக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -