மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 78 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72537-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 64 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 70684 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1119 இருக்கிறது. இந்நிலையில் 734 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் விசாரித்தோம்.
விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 58 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44727-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 61 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 43662 -ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 532 - ஆக இருக்கிறது. இந்நிலையில் 533 நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
யாக குண்டத்தில் கொரோனா பொம்பை செய்தி படிக்க கிளிக் செய்யவும் - மதுரை : யாக குண்டத்தில் கொரோனா பொம்மையை போட்டுப் பொசுக்கி வழிபட்ட பக்தர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 57 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17870-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 89 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 17097-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 192-ஆக இருக்கிறது. இந்நிலையில் 581 நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 25 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 19690 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 43 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 19147-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 336 ஆக இருக்கிறது. இந்நிலையில் 207 பேர் கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று மட்டும் 66 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27188-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 81 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 26239-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 329 இருக்கிறது. இந்நிலையில் 620 கொரோனா பாதிப்பால் புதுக்கோட்டையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் -தூக்குமேடை பாலு படிப்பகத்தை இடித்து தள்ளிய தி.மு.க நிர்வாகி: கொதித்து எழுந்த மார்க்சிஸ்ட் கட்சியினர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 31 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31714-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 12 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 30748-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 6 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 599 இருக்கிறது. இந்நிலையில் 367 நபர்கள் கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனி மாவட்டத்தில் இன்று மட்டும் 49 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42469-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41539-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் மட்டும் உயிரிழந்தார். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 494 இருக்கிறது. இந்நிலையில் 436 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க - கடும் சிரமத்திற்குப் பின் ஊர் திரும்பிய இளைஞர்: முதல் நாளே மதுபோதையில் விபத்தில் பலி..!