கிணறுகள் ஏன் வட்ட வடிவத்தில் உள்ளன? வட்ட வடிவ கிணறுகளுக்குப் பின்னால் உள்ள அறிவியலை தெஞ்சிக்கோங்க
மற்ற வடிவ கிணறுகளை விட அவை வலிமையானவை என்பதால் வட்ட வடிவ கிணறுகள் கட்டப்படுகின்றன

நம்மைச் சுற்றி நாம் இருமுறை யோசிக்காத பல விஷயங்கள் உள்ளன. கேள்விகள் எழுந்தாலும், அது ஏன் என்று யாரும் அறிய முயற்சிப்பதில்லை! உதாரணமாக, நீங்கள் பல கிணறுகளைப் பார்த்திருக்க முடியும். ஆனால் அவை பெரும்பாலும் வட்ட வடிவத்தில் இருப்பது ஏன் என்று நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? அது அழகாகத் தெரிவதால் மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் நோக்கத்திற்காக உதவுகிறதா? இன்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஒரு கிணறை முக்கோண வடிவிலோ, சதுர வடிவிலோ அல்லது அறுகோண வடிவிலோ கட்ட முடியும். கட்டக்கூடாது என்று இல்லை. ஆனால் அவ்வாறு அந்த வடிவத்தில் கட்டினால் அது நீண்ட காலம் நீடிக்காது. இதற்குப் பின்னால் உள்ள காரணம், அதிக மூலைகள் இருந்தால், அந்த மூலைகளில் அதிக நீர் அழுத்தம் இருக்கும்.
இந்த அழுத்தம் காரணமாக கிணற்றின் சுவர்களில் விரிசல்கள் தோன்றத் தொடங்கி, சுவர்கள் முன்கூட்டியே இடிந்து விழ வாய்ப்புண்டு என்பதாலேயே அவ்வாறு கட்டுவதை முன்னோர்கள் தவிர்த்துள்ளனர்.
வட்ட வடிவ கிணற்றின் நன்மை என்னவென்றால், நீர் அழுத்தம் எல்லா பக்கங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும். நீரின் சக்தி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்காது, மேலும் இந்த கிணறுகள் பல தசாப்தங்களாக அப்படியே இருக்கின்றன.
இதனால், மற்ற வடிவ கிணறுகளை விட அவை வலிமையானவை என்பதால் வட்ட வடிவ கிணறுகள் கட்டப்படுகின்றன. மேலும், அழுத்தத்தின் கீழ் மூழ்கும் வாய்ப்பு குறைவாக இருப்பதால், சதுர அல்லது முக்கோண கிணறுகளை விட இது அதிக நிலைத்தன்மை கொண்டதாக இருக்கிறது.
வட்ட வடிவ கிணறுகளை கட்டுவதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றில் ஒன்று கட்டுமான செலவு. வட்ட வடிவ கிணறுகளை கட்டுவதற்கு குறைவான பொருட்கள் மற்றும் உழைப்பு தேவைப்படுகிறது, இதனால், இது மலிவானது. மேலும், சதுர அல்லது முக்கோண கிணறுகளை விட வட்ட வடிவ கிணறுகளை தோண்டுவது எளிதும் கூட என்பதால் முன்னோர்கள் இதை ஃபாலோ செய்துள்ளனர்.
மிக முக்கியமாக, மற்ற வகை கிணறுகளுடன் ஒப்பிடுகையில், வட்ட வடிவ கிணறுகள் குறைந்த முயற்சியுடன் அதிக தண்ணீரை உற்பத்தி செய்கின்றன. கிணறுகளை எந்த வடிவத்திலும் தோண்டலாம் என்றாலும், வட்ட வடிவ கிணறுகள் மிகவும் பொதுவானவை என்பதற்கான காரணம் இதுதான்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

