மேலும் அறிய

Fact Check: எடப்பாடி பழனிசாமியை கடுமையான, மோசமான வார்த்தைகளால் திட்டிய சவுக்கு சங்கர்? உண்மை என்ன?

Fact Check: யூடியூபர் சவுக்கு சங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக திட்டியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Fact Check: யூடியூபர் சவுக்கு சங்கர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக திட்டியதாக  பரவும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

இணையத்தில் பரவும் புகைப்படம்:

தனது கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு, சவுக்கு சங்கர் கடுமையாக எதிர்வினையாற்றியதாக ஒரு ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.  அதில், “விடியா திமுக அரசின் ஊழல்களை தொடர்ந்து மக்களிடத்தில் அம்பலப்படுத்தும் சவுக்கு மீடியா ஊடகத்தை முடக்கும் முனைப்பில் அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் வாசகர்களை குறிவைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகளில் கைது செய்யும் விடியா அரசின் அராஜகப் போக்கிற்கு எனது  கண்டனம்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  அந்த பதிவிற்கு பதிலளித்த சவுக்கு சங்கர், , “உன் கண்டனத்த வெச்சு XXX? காப்பாத்துடா XXX” என்று கூறியது போன்று ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

புகைப்படத்தின் உண்மைத் தன்மை என்ன?

யூடியூபர் சவுக்கு சங்கர் சமீப காலமாக அதிமுக ஆதரவு கருத்துக்களை கூறி வந்தார். அவர் அதிமுக தலைமையை எதிர்த்து இப்படி ஆபாசமான கருத்தைப் பதிவிட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே, இது எடிட் செய்யப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். முதலில் சவுக்கு சங்கர் டிவிட்டர் பக்கத்தில் வெளியான பதிவுகளை பார்த்தோம். எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த எக்ஸ் தள பதிவுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் எடப்பாடி பழனிசாமி, அதிமுக என்று சவுக்கு சங்கர் பதில் அளித்திருந்தார். இந்த பதிவை சவுக்கு சங்கர் மே 3, 2024 பிற்பகல் 12:04க்கு பதிவிட்டிருந்தார். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஸ்கிரீன்ஷாட்டிலும் சரியாக 12:04க்கு பதிவிட்டது போன்று இருந்தது. இதன் மூலம் சவுக்கு சங்கர் வெளியிட்ட பதிவை ஸ்கிரீன்ஷாட் எடுத்து,  தவறான கருத்தைச் சேர்த்து சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டிருப்பது தெளிவானது.

சவுக்கு சங்கரை போலீஸ் கைது செய்துள்ளதால். உண்மையில் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துப் பதிவிட்டுவிட்டு, பிறகு அகற்றிவிட்டு, புதிதாக போஸ்ட் செய்தாரா என்பதை நேரடியாக உறுதி செய்ய முடியவில்லை. அவரது தரப்பைத் தொடர்புகொண்ட போது “சவுக்கு சங்கருக்கு ஆகாத கட்சியைச் சார்ந்தவர்கள் இப்படி செய்துள்ளனர். எடப்பாடி பழனிசாமியை ஆபாசமான முறையில் விமர்சித்து சவுக்கு சங்கர் ட்வீட் செய்யவில்லை” என்றனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் குற்ப்பிட்ட ஸ்க்ரீன் ஷாட் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது மற்றும் தவறானது என்பது உறுதி செய்யப்படுகிறது.

Fact Check: எடப்பாடி பழனிசாமியை கடுமையான, மோசமான வார்த்தைகளால் திட்டிய சவுக்கு சங்கர்? உண்மை என்ன?

          இணையத்தில் பரவும் போலி மற்றும் உண்மையான புகைப்படங்களின் ஒப்பீடு

முடிவு:

தன் நிறுவன ஊழியர்கள் கைது செய்யப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த சவுக்கு சங்கர் என்று பரவும்  எக்ஸ் போஸ்ட் ஸ்கிரீன்ஷாட் போலியானது என்பதையே விசாரணை உறுதி செய்கிறது.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியை தரக்குறைவாக சவுக்கு சங்கர் விமர்சித்தாரா?

பின்குறிப்பு: இந்த செய்தி தொகுப்பு முதலில் சக்தி கலெக்டிவ் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக tamil.factcrescendo.com என்ற இணைய செய்தி தளத்தில் வெளியிடப்பட்டது. அதன் சாராம்சத்தை அப்படியே பின்பற்றி, ABP Nadu தனது வாசகர்களுக்கு ஏற்ப இந்த செய்தி தொகுப்பை சற்றே திருத்தி எழுதியுள்ளது.

தலைப்பு செய்திகள்

யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget