Viruman Release LIVE: “தாரை தப்பட்டை கிழியப்போகுது” - வெறித்தனமாக களமிறங்கிய விருமன்.. லைவ் அப்டேட்ஸ்!

Viruman Release LIVE Updates: ஆகஸ்ட் 12 ஆம் தேதி விருமன் படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது

ABP NADU Last Updated: 13 Aug 2022 01:46 PM
காலாவதியான கதைக்களம்? விருமன் விமர்சனம்!

சுல்தானை வீழ்த்திய விருமன்

கார்த்தி நடித்த சுல்தான் படம் முதல் நாளில் 5.12 கோடியை வசூல் செய்தது. சுல்தான் படத்தை விட 3 கோடி அதிகமாக வசூலித்து தமிழகம் முழுவதும் மொத்தம் 8.2 கோடியை விருமன் படம் வசூல் செய்துள்ளது.

Viruman Box Office : முதல் நாளில் 8.2 கோடியை வசூல் செய்த விருமன் படம்

விருமன் படம் முதல் நாளில் 8.2 கோடியை வசூல் செய்துள்ளது. கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் முதல் நாள் வசூல் 5.12 கோடி என்பது குறிப்பிடதக்கது.

விருமன் படம் எப்படி இருக்கு?

விருமன் படத்தின் முழு விமர்சனத்தை படிக்க : https://bit.ly/3drq32D


 

விருமன் படத்தை குறித்து மக்கள் நினைப்பது என்ன ?

விருமன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

விருமன் பட வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்த விக்ரம் பிரபு மற்றும் கெளதம் கார்த்திக் 









Viruman Audience Response : தியேட்டரில் பார்த்து ரசிக்க வேண்டிய படம்

நடிகர் கார்த்தி விருமன் படத்தின் உயிர் நாடி, நடிகை அதிதி நன்றாக நடித்துள்ளார் - ட்விட்டரில் குவியும் கருத்து 





நடிகை அதிதிக்கு குவியும் வாழ்த்துக்கள்

தன் முதல் படத்திலேயே நடிகை அதிதி சங்கர் சூப்பராக நடித்து அசத்தியுள்ளார் என பலரும் பாராட்டு.





Viruman Audience Response : படம் வேற லெவல்.. கருத்து தெறிவித்து வரும் மக்கள்

மக்களின் விமர்சனத்தை ஷேர் செய்த 2D தயாரிப்பு நிறுவனம்





Viruman Audience Response : அதோ பாருங்க அதிதி.. கை காட்டிய கூல் சுரேஷ்

திரையரங்கில் தான் நடித்த படத்தை காண வந்த நடிகை அதிதி சங்கர் 





கார்த்தி நடித்த விருமன் படத்தை குறித்து ட்வீட் செய்த சூர்யா

கார்த்தி நடித்த விருமன் படத்தை பார்த்துவிட்டு ட்விட்டரில் கருத்தை பதிவு செய்த நடிகர் சூர்யா





திரையரங்குகளை தெறிக்கவிட்ட யுவனின் பின்னணி இசை

டைட்டில் கார்ட்டுக்கு சிறந்த பின்னணி இசை அமைப்பவர் யுவன்!





Pandiraj about Viruman : இன்னொரு வெற்றியை சேத்துக்கிட்டீங்க - இயக்குநர் பாண்டிராஜ்

Twitter Review Viruman : ஹவுஸ்ஃபுல் ஸ்டார்ட் : ட்விட்டர் ரிவ்யூ - விருமன்

Viruman Live : விருமன் படத்தை காண ஆவலாக இருக்கும் ரசிகர்கள்

விருமன் டீ சர்ட்- ஐ விற்பனை செய்யும் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள்





Viruman Live : ஃப்லெக்ஸ் வைத்து கொண்டாடும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள்

நாளை வெளியாகும் விருமன் படத்துக்கு ஃப்லெக்ஸ் வைத்து கொண்டாடவிருக்கும் சூர்யாவின் ரசிகர்கள்.





Viruman Live : நாளை 6:30 மணிக்கு ஆரம்பிக்கும் ஸ்பெஷல் ஷோ

 பழனி ஆறுமுக சினிமாஸில், நாளை காலை 6:30 மணிக்கு ஆரம்பிக்கும் விருமன் பட ஸ்பெஷல் ஷோ





Viruman live : யுவனின் இசையை கேட்க காத்திருக்கும் ரசிகர்கள்

யுவன் சங்கர் ராஜாவின் இசையை திரையரங்குகளில் கேட்டு மகிழ காத்திருக்கும் ரசிகர்கள்





Viruman Live : நம்ப ஊரு, நம்ப மனிதர்கள், நம்ப கதை - நடிகர் கார்த்தி ட்வீட்

நடிகர் கார்த்தி அவரின் ட்விட்டர் பக்கத்தில் நம்ப ஊரு, நம்ப மனிதர்கள், நம்ப கதை என்று ட்வீட் செய்துள்ளார்.





Viruman Live : விருமன் படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்!

விருமன் படத்தின் லேட்டஸ்ட் க்ளிக்!





Viruman Live : விருமன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

விருமன் படம், நாளை உலகம் முழுவதுமுள்ள திரையரங்குளில் வெளியாகும் நிலையில், படத்தின் ஸ்னீக் பிக்கை 2D தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.





Background

Viruman Release LIVE Updates: தமிழ் சினிமாவில் கிராமத்து கதைக்களத்தை கையில் எடுத்து படமாக்கும் இயக்குநரில் ஒருவரான முத்தையா அடுத்ததாக இயக்கியுள்ள படம் விருமன்(Viruman). இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாகவும், இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், நடிகர் சூரி, ஆர்.கே.சுரேஷ், மனோஜ் பாரதிராஜா ஆகியோரும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் நாளை தியேட்டர்களில் வெளியாகிறது. 


இதன் காரணமாக கார்த்தி, அதிதி ஊடகங்களில் விரும6ன் படத்தின் புரொமோஷன்களில் கலந்து கொண்டுள்ளனர். அதில் நேர்காணல் ஒன்றிற்கு அளித்துள்ள கார்த்தி அளித்துள்ள பேட்டியில் விருமன் படத்தில் ஏன் நடித்தேன் என தெரிவித்துள்ளார். அதில்  நான் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை நான் சந்திக்கும் போதெல்லாம் கிராமங்களை மையமாக வைத்து அதிக படம் எடுக்க சொல்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் ரிலீசான போது கிராமப்பகுதிகளில் உள்ள தியேட்டர்களை மூட முடிவு செய்த உரிமையாளர்களின் எண்ணத்தை அது மாற்றியது. மேலும் சமீபத்தில் வந்த படங்களில் கிராமம் சார்ந்த படங்கள் மிகக் குறைவு அதனால் அதனை தேர்வு செய்தேன் என கார்த்தி தெரிவித்துள்ளார். 


 






முன்னதாக, 'விருமன்' திரைப்படம் விநாயகர் சதுர்த்தி தினமான ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகும் என படக்குழுவால் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் 12 ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற இந்த திரைப்படம் விரைவாக எடுத்து முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.