வீர தீர சூரன் படத்தில் ரசிகரால் குழப்பம்...ஒரே டைட்டிலால் வந்த சிக்கல்
நடிகர் விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பின்தங்கியுள்ளது.

வீர தீர சூரன் 2
அருண்குமார் விக்ரம் கூட்டணியில் உருவாகி திரையரங்கில் வெளியாகியுள்ள படம் வீர தீர சூரன். எச்.ஆர் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. எஸ்.ஜே சூர்யா , துஷாரா , சூரஜ் வெஞரமூடு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.விபிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த 27 ஆம் தேதி பல சிக்கலுக்கு பின் இப்படம் திரையரங்கில் வெளியானது. இரு பாகங்கள் கொண்ட படமாக உருவாக இருக்கும் இந்த வரிசையில் 2 ஆம் பாகம் முதலில் வெளியாகியுள்ளது.
ரிலீஸில் சிக்கல்
மார்ச் 27 ஆம் தேதி காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்க இருந்த நிலையில் முந்தைய நாள் மாலை படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இப்படத்தில் எச் ஆர் பிக்ச்சர்ஸ் உடன் இணைந்து B4U மீடியா முதலீடு செய்துள்ளது. படத்தின் ஓடிடி உரிமத்தை விற்பனை செய்யும் முன்பே தயாரிப்பு நிறுவனம் படத்தின் ரிலீஸ் தேதியை வெளியிட்டதாகவும் இதனால் ஓடிடி தளம் படத்தை குறைந்த விலைக்கே வாங்க முன்வந்தன என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது B4U மீடியா. இதனால் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்தது டெல்லி உயர் நீதிமன்றன். பின் மாலையா இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து படம் வெளியானது
Just In




மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படமும் இதே நாள் வெளியானதால் வீர தீர சூரன் படத்திற்கு டிக்கெட் புக்கிங் குறைவாகவே நடந்தது. இந்த பிரச்சனையைத் தொடர்ந்து படத்திற்கு சின்ன ஓப்பனிங்க் தான் கிடைத்துள்ளது.
வாயைக் கொடுத்து மாட்டிக் கொண்ட ரசிகர்
வீர தீர சூரன் படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டும் விமர்சகர்கள் பாசிட்டிவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள். இதனால் படம் அடுத்தடுத்த வாரங்களில் பிக் அப் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியான நிலையில் இப்படத்திற்கு போலியான விமர்சனம் செய்ய வந்த ரசிகர் ஒருவரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் படத்தை பாராட்டி பேசும் அந்த ரசிகர் வீர தீர சூரன் முதல் பாகத்தை தான் பார்த்திருப்பதாகவும் அதுவும் சூப்பராக இருப்பதாகவும் தெரிவித்தார். 2 ஆவது பாகம் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அந்த ரசிகர் முதல் பாகத்தை பார்த்திருப்பதாக சொன்னது குழப்பத்தை ஏற்படுத்தியது. ஷங்கர் தயால் விஷ்ணு விஷாலை வைத்து இயக்கிய வீர தீர சூரன் படத்தைதான் அவர் முதல் பாகம் என புரிந்து வைத்துள்ளார் என ரசிகர்கள் கரெட்க் செய்து வருகிறார்கள்.