விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலம் ஆனவர் திவ்யதர்ஷினி. டிடி என்றதுமே நம் நினைவுக்கு வரும் ஒரே நிகழ்ச்சி அதுதான். சின்னத்திரை முதல் திரை பிரபலங்களான உச்ச நடிகர்கள் வரை பேட்டி எடுத்துள்ளார் திவ்யதர்ஷினி. விஜய் டிவி பற்றி பேசத் தொடங்கிவிட்டாலே போதும் டிடி ரொம்ப எமோஷனலாக மாறிவிடுவார். குறிப்பாக கமல்ஹாசனின் அதி தீவிர ரசிகையும் கூட. 

Continues below advertisement


என் ஆடை என் உரிமை


ஓகே கண்மணி, காபி வித் காதல், பவர் பாண்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்திருக்கிறார்.  இந்நிலையில், அவர் அளித்த சமீபத்திய பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். எனக்கு நிறைய ஸ்டார் நடிகர்களை பேட்டி எடுத்திருக்கிறேன். அதில், ஒரு நடிகை அவர் அணிந்த ஆடை போலவே நானும் அணிந்து அவரை பேட்டி எடுத்தேன். அது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு நடிகை அணியும் ஆடை போல தொகுப்பாளரும் அணிவதா என்ற எண்ணம் அவருக்கு இருந்தது. என் ஆடை என் உரிமை என்பது எனக்கு தெரியும். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்தேன் என டிடி தைரியமாக தெரிவித்தார். 


தல அஜித்தை பேட்டி எடுக்க வேண்டும்


தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட நடிகர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்களுடன் நீண்ட நேரம் உரையைாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பேட்டியும் எடுத்துவிட்டேன். ஆனால், தல அஜித்தை மட்டும் தான் என் லிஸ்டில் மிஸ் ஆகிட்டாரு. எனக்கு அவர் கூட நேருக்கு நேர் உட்கார்ந்து பேட்டி எடுக்க வேண்டும் என்பது தான் கனவாக இருக்கிறது. அது நடந்தால் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் என மனம் திறந்து பேசினார். 


இப்படிப்பட்ட கணவர் ஆண்மகன்


இந்நிலையில், டிடி அளித்த பேட்டி ஒன்றில், இப்படிப்பட்ட கணவரைத்தான் பிடிக்கும் என தெரிவித்திருக்கிறார். அதற்கு பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர் கூறியதாவது, உங்களுக்கு 18 வயது பெண்களுக்கு பைக்கில் ரவுண்டி அடிப்பது,  காலரை தூக்கி விட்டு, நல்ல உயரமா ரக்கட் பாயா வரும் பசங்களைத்தான் பிடித்திருக்கும் என்று சொல்வீர்கள். ஆனால், அது ஆண்மகனுடைய செயலா என்று கேட்டால் நான் இல்லை என்பேன். நான் வேலை முடித்து வீட்டிற்கு போகும்போது காலை பிடித்து விடும் நபராக ஆண்மகன் இருக்க வேண்டும். எனக்காக அவன் காபி போட்டு, சமையல் செய்து குளிக்க செல்கிறேன் என்று சொல்லும் நபராக ஆண்மகன் இருக்க வேண்டும். 


மனம் திறந்த டிடி


இப்படிப்பட்ட ஒரு கணவன் தனது மனைவிக்கு பணிவிடை செய்யும்போது மற்ற ஆண்கள் என்னடா இப்படி பண்ணிட்டு இருக்க என்று சொல்லலாம். ஆனால்,மனைவியுடன் கணவன் நடந்து செல்லும்போது மனைவியின் கைகளை பிடித்துக்கொண்டு, Handbag-ஐ சுமந்து செல்பவன்தான் ஆண்மையுடைய ஆண் என டிடி தெரிவித்துள்ளார்.