தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஷால், நடிகர் சங்க கட்டடம் கட்டிய பின்னரே திருமணம் செய்துகொள்வேன் என 9 வருடத்திற்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டார். அவர் எந்த நேரத்தில் அப்படி அறிவிப்பை வெளியிட்டாரோ அதிலிருந்தே நடிகர் சங்க கட்டடம் கட்டுவதில் பல சிக்கல்கள் எழுந்தன. நடிகர் சங்கத்திலும் ப குழறுபடிகள் நிகழ்ந்தன. தற்போது சுமூகமான சூழல் ஏற்பட்டு நடிகர் சங்க கட்டிடம் கட்டும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில், தனது திருமண நாளில் முக்கிய சர்ப்ரைஸ் இருப்பதாக விஷால் தெரிவித்திருக்கிறார். 

Continues below advertisement

வைரல் பீவர்

நடிகர் விஷால் பெயர் குறித்த விமர்சனங்களும் கிசுகிசுக்கள் வராத நாளே இல்லை. அவர் பெயரோடு பல நடிகைகளின் பெயர்களும் அடிபடும். இந்த சூழலில், செய்தியாளர்கள் அவரிடம் அதிகம் கேட்கும் கேள்வி திருமணம் எப்போது என்ற ஒன்று தான். அதேபான்று அவர் நடிப்பில் வெளியான மதகஜராஜா படத்தின் புரோமோஷனில் பேசிய போது விஷால் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போனார். முகம் வீங்கி, வயது முதிர்ந்த தோற்றத்தில் காணப்பட்டார். பிறகு விஷாலின் உடல்நிலை சரியில்லை அவருக்கு வைரல் பீவர் என விளக்கம் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார் விஷால்.  

நடிகையுடன் திருமணம்

தொடர்ந்து திருமணம் எப்போது என எல்லோரும் கேட்ட கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சாய் தன்ஷிகா நடித்த யோகிடா படத்தின் விழாவில் விஷால் - சாய் தன்ஷிகாவின் திருமணம் தேதி அறிவிக்கப்பட்டது. இதனை இருவரும் மகிழ்ச்சியுடன் செய்தியாளர்கள் முன்பு தெரிவித்துகொண்டனர். விஷாலும் வெட்கத்துடன் மேடையில் காணப்பட்டார். பின்பு சாய் தன்ஷிகா விஷாலை பேபி என்றும் அழைத்தார். தற்போது நடிகர் சங்க கட்டடத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திருமண ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Continues below advertisement

9 வருடங்கள் தாக்கு பிடித்துவிட்டேன்

இந்நிலையில், நடிகர் சங்க கட்டடம் எப்போது திறக்கப்படுகிறது என்றும் திருமணம் எப்போது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்போது இதற்கு பதில் அளித்த விஷால், நான் 9 வருடங்கள் தாக்குபிடித்துவிட்டேன். இன்னும் 2 மாதங்கள் தான். ஆக.29ஆம் தேதி என் பிறந்தநாள் அன்று கண்டிப்பாக ஒரு நல்ல செய்தி இருக்கிறது. கண்டிப்பாக நான் சொன்னபடி நடிகர் சங்க கட்டடம் தயாரானதும்  முதல் திருமணம் என்னுடையது தான் என தெரிவித்தார்.