ChatGPT Ghibli Animation
ஏஐ தொழில் நுட்பமான சாட் ஜிபிடி பல துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அன்றாட வாழ்க்கையில் பயண்படுத்து வருகிறது. குறிப்பாக மீடியாத் துறையில் இருப்பவர்களுக்கு போஸ்டர் உருவாக்குவதிலும் புதுப்புது அனிமேஷன் கான்செப்ட்களை உருவாக்குவதிலும் அதிகமாக பயண்பட்டு வருகிறது. அந்த வகையில் சாட் ஜிபிடி புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜப்பானிய பாரம்பரிய அனிமேஷன் ஸ்டைலான ஜிப்லி ஸ்டைலில் அது காட்சிகளை இலவசமாக உருவாக்கி தருகிறது. முன்பு கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே இருந்த இந்த வசதியை தற்போது அனைவரும் இலவசமாக பயண்படுத்திக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு மூன்று ஜிப்லி ஸ்டைலில் அனிமேஷன் இமேஜை ஒருவர் உருவாக்கிக் கொள்ளலாம்
ஜிப்லி அனிமேஷ் என்றால் என்ன
பல அனிமேஷன் தொடர்களுக்கு புகழ்போன நாடு ஜப்பான். இன்றைய தலைமுறையினர் மத்தியில் பிரபலமாக இருக்கும் நருடோ வகை அனிமேஷன்கள் போல புகழ்பெற்ற ஒரு அனிமேஷ் ஸ்டைல் தான் ஜிப்லி. ஜப்பானிய இயக்குநர் ஹாயாவோ மியாஸாகி இந்த அனிமேஷன் ஸ்டைலை பயண்படுத்தி பல புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார். ஒவ்வொரு காட்சிகளையும் கைப்பட வரைந்து பின் இந்த இமேஜ்கள் காட்சிகளாக உயிர்கொடுக்கப்படுகின்றன.
Castle in the Sky (1986), My Neighbor Totoro (1988), Princess Mononoke (1997), Spirited Away (2001), Howl's Moving Castle (2004), Ponyo (2008), The Wind Rises (2013), and The Boy and the Heron (2023). போன்ற உலகப் புகழ்பெற்ற படங்களை இயக்கியுள்ளார் மியாஸாகி. இந்த வகை அனிமேஷன் அமெரிக்க அனிமேஷன் படங்களை விட தனித்துவமான இடத்தை ரசிகர்களிடம் பெற்றிருக்கின்றன. தற்போது சாட் ஜி.பி.டி இதே போல் அனிமேஷன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது ரசிகர்களிடம் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
எது உண்மையான கலை
ஜிப்லி அனிமேஷன் முறையால் உருவாக்கப்பட்டும் காட்சிகள் மிக உயிர்ப்பானவை அதை பல தனித்தனி கலைஞர்கள் சேர்ந்து தங்களது கைகளால் உருவாக்குகிறார். ஆனால் இதே ஸ்டைல் அனிமேஷனை ஒரு ஏ.ஐ தொழில் நுட்பம் போலி செய்வது கலைஞர்களை அவமதிப்பதாகவும் என்று பலர் கருதுகிறார்கள். மேலும் இந்தியாவில் இந்த வசதி அறிமுகப்படுத்திய பின்பே அரசியல், மதம் தொடர்பான இமேஜ்களை மக்கள் உருவாக்கி வருவது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட நிகழ்வை ஏ.ஐ மூலம் சாட் ஜிபிடியில் காட்சிகளை உருவாக்கி மக்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.
ஏ.ஐ வளர்ச்சிக்குப் பின் உண்மையான உணர்வு என்கிற ஒன்று இல்லமல் போய் எதை வேண்டுமானால் உருவாக்கிவிடலாம் என்கிற மனப்பான்மை வளர்ந்து வருவது கலைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி பல கேள்விகளை எழச் செய்துள்ளது.