தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ராம், சீதாவை பிரிக்க மகா பூஜையை தொடங்கி விரதம் இருக்க தயாரான நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மகா யாரிடமும் கோபப்பட கூடாது என்பதால் அவளை கோபப்படுத்த சீதாவும் மீராவும் கூட்டு சேர்ந்து மகா சாப்பிடும் சாப்பாட்டில் உப்பை சேர்க்க முடிவு செய்து கலக்கவும் செய்கின்றனர். பிறகு மகா ஓம் நமசிவாய என்று சாமி மந்திரம் எல்லாம் சொல்லி விட்டு சாப்பிட சாப்பாட்டில் உப்பு கலக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.
மகா தன்னை மீறி கோபப்பட சீதா நீங்க கோபப்பட கூடாது என்று சொல்ல தனது கோபத்தை அடக்கி கொள்கிறாள். அதன் பிறகு மகா பூஜையில் இருக்கும் போது சீதா அவளுக்காக சாப்பாடு கொண்டு வந்து எனக்காக தான் விரதம் இருக்கீங்க, ஆனால் நான் தப்பு பண்ணிட்டேன், உங்களுக்காக ஸ்பெஷலாக சமைத்து கொண்டு வந்திருப்பதாக சாப்பாட்டை கொடுக்க மகா திரும்பவும் அந்த சாப்பாட்டை சாப்பிட்டு கோபம் அடைகிறாள்.
அதனை தொடர்ந்து கல்பனாவும் அர்ச்சனாவும் சேர்ந்து வீட்டின் பியூஸை பிடிங்கி கரண்ட் ஆப் செய்து சீதாவை படியில் இருந்து தள்ளிவிட பிளான் போடுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இன்றைய சீதா ராமன் எபிசோட் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க
உயர்நீதிமன்றம் அதிரடி: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை.. தீர்ப்பின் முழு விவரம் இதோ..