மேலும் அறிய
Advertisement
Baakiyalakshmi serial August 21: தாத்தாவின் பிறந்தநாளுக்கு எழில் வருவானா? செழியனால் கோபிக்கும் ராதிகாவும் சண்டை... பாக்கியலட்சுமியில் இன்று
Baakiyalakshmi serial Today : தாத்தாவின் பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வர எழில் பற்றி கவலையில் இருக்கும் ஈஸ்வரி என்ன செய்தார் தெரியுமா? இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்டில்
Baakiyalakshmi serial August 21 : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்றைய எபிசோட்டில் தாத்தாவின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது பற்றி பாக்யா குடும்பத்தில் உள்ள அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நெருங்கின சொந்தக்காரங்க அக்கம் பக்கத்துல இருக்குறவங்க எல்லாரையும் கூப்பிட்டு சிறப்பா செய்யலாம் என பாக்கியா சொல்கிறாள்.
நாலு நாள் முன்னாடியே ஏற்பாடு பண்ணிருந்தா எல்லாரையும் கூப்பிட்டு இருக்கலாம். இப்ப நம்ம சிம்பிளா பக்கத்துல இருக்கிற கோயில்ல பண்ணிக்கலாம். என்ன ஈஸ்வரி சொல்கிறார். அனைவரும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் ராமமூர்த்தியின் முகம் மட்டும் வாட்டமாக இருக்கிறது. "ஏன் தாத்தா எதுவுமே பேச மாட்டேங்குறீங்க? என்ன செழியன் கேட்கிறான்.
"எழில் வீட்டைவிட்டு போயிட்டான். இப்ப இந்த கொண்டாட்டமெல்லாம் அவசியம் தானா?" என வருத்தப்பட்டு பேசுகிறார் தாத்தா. வீட்ல இருக்க மத்தவங்கள பத்தி யோசிங்க என ஈஸ்வரி சொல்கிறார். அனைவரும் சேர்ந்து அவரை சமாதானம் செய்து சம்மதிக்க வைக்கிறார்கள்.
ஈஸ்வரி பாக்கியாவிடம் எழிலுக்கு போன் பண்ணி விசேஷத்துக்கு வர சொல்லி சொல்ல சொல்கிறார். ஆனால் பாக்யா எதுவுமே பேசாமல் சென்று விடுகிறாள். செல்வியும் அதையே கேட்க பாக்யா அவன் நிச்சயம் வருவான் என நமபிக்கையுடன் சொல்கிறாள்.
வாக்கிங் முடித்து வீட்டுக்கு சென்ற கோபி ராதிகாவிடம் ஜெனி கர்ப்பமாக இருப்பது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். அதைக்கேட்ட ராதிகா கடுப்பாகி கோபியிடம் சண்டை போடுகிறாள்.
எழிலும் அமிர்தாவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாக்கியா அமிர்தாவுக்கு போன் பண்ணி பேசியதை பற்றி சொல்ல எனக்கு மட்டும் அம்மா பண்ணவே இல்லை என வருத்தப் படுகிறான் எழில். நீங்க ஃபோன் பண்ணி அம்மாவுக்கு பேச வேண்டியது தானே என அம்ரிதா சொல்கிறாள். அந்த நேரம் பார்த்து ஈஸ்வரி எழிலுக்கு போன் பண்ணி போன் செய்கிறார். எழில் எடுக்காததால் அமிர்தா போனை எடுத்து பேச ஈஸ்வரி எழிலிடம் ஃபோனை கொடு என சொல்கிறார்.
பிறந்தநாளுக்கு எழிலை வர சொல்லி அழைக்கிறார் ஈஸ்வரி. ஆனால் எழில் தயங்கவே சரி நீ வர தேவையில்லை என சொல்லி விட்டு போனை வைத்து விடுகிறார். இது தான் இன்றைய பாக்கியலட்சுமி எபிசோடுக்கான கதைக்களம்.
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion