நடிகர் சிலம்பரசன் சிறு வயதிலிருந்தே நடித்துவருகிறார். சினிமாவின் பெரும்பாலான துறைகளில் கைதேர்ந்தவர் என பெயர் எடுத்திருக்கும் சிம்பு ஷூட்டிங்கிற்கு ஒழுங்காக செல்வதில்லை என்ற பெயரை எடுத்திருந்தார்.


அதேசமயம், அவர் ஷூட்டிங்கிற்கு வந்தால் ஒரே டேக்கில் ஷாட்டை முடித்துக்கொடுத்துவிடுவார் அந்த அளவுக்கு திறமைசாலி சிம்பு என பலரும் பாராட்டியிருக்கின்றனர். ஆனால், ஏதோ சிக்கலில் தவித்த சிம்பு இடையில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.


ஒருவழியாக சிக்கல்களில் இருந்து மீண்ட சிலம்பரசன் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு படத்தில் நடித்தார். உடல் எடையை குறைத்து ஷூட்டிங்கிற்கு நேரத்திற்கு சென்று என தான் வேறு சிம்புவாக ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறேன் என கோலிவுட்டுக்கு உணர்த்தினார்.


மாநாடு படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. படத்தில் சிம்பு மட்டுமின்றி எஸ்.ஜே. சூர்யாவும் நடிப்பில் கலக்கியிருந்தார். மேலும், நெட்டிசன்களின் டெம்ப்ளேட்டாகவும் உருவானார். மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்புவுக்கும், எஸ்.ஜே. சூர்யாவுக்கு பல படங்கள் புக் ஆகின்றன என தகவல்கள் வெளியாகியுள்ளன.




இந்நிலையில், மலையாளத்தில் வெளியான ட்ரைவிங் லைசென்ஸ் திரைப்பட ரீமேக்கில் சிம்புவும், எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்து நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


லால் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ட்ரைவிங் லைசென்ஸ். ப்ரித்விராஜ் மற்றும் சுராஜ் நடிப்பில் வெளியான இப்படம் மலையாள திரையுலக ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது.


தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் ஆக இருப்பதாகவும், அதை  வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவுள்ளார் எனவும் தெரிகிறது. 


தமிழ் ரீமேக்கில், ப்ரித்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், சுராஜ் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: ”ஆமா அந்த பாட்ட வாலி எனக்காகத்தான் எழுதினார்“ : Take It Easy பாட்டை பற்றி ஊர்வசி சொன்ன சீக்ரெட்..


Rajini Basha Movie: பாட்ஷாவுக்காக ரஜினிக்கும் மனோபாலாவுக்கும் நடந்த சண்டை.. மோர் கொடுத்து தணித்த லதா..!


Watch Video: அரசுப்பள்ளியில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆசிரியர், தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்