சென்னை விருகம் பாக்கத்தை சேர்ந்த 27 வயதான சுபாஷ் என்பவர் கடந்த 1 ம்தேதி மதுரவாயல் அருகே நூம்பல் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுபாஷின் கார் மீது பைக் மோதியதாக கூறப்படுகிறது. பைக்கில் வந்த நான்கு பேர் தன்னிடம் தகராறில் ஈடுபட்டதாக மதுரவாயல் காவல் நிலையத்தில் சுபாஷ் புகாரளித்துள்ளார்.
மேலும், புகாரளித்த காவல்துறையினரிடம் தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி, ஒரு விசிட்டிங் கார்டையும் சுபாஷ் கொடுத்துள்ளார்.இதையடுத்து, புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பைக்கில் வந்த 4 பேரை பிடித்து சிறையில் அடைத்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட நான்கு பேரை விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவித்த காவல் துறையினர், சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டு மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டில் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில், மதுரவாயல் காவல் நிலையத்துக்கு சுபாஷ் நேற்று முன்தினம் வந்திருந்தபோது, காவல் துறையினர் விசிட்டிங் கார்டு குறித்து தீவிரமாக விசாரித்துள்ளனர். அப்பொழுது, சுபாஷ் போலி ஐஏஎஸ் அதிகாரி எனவும், இந்த விசிட்டிங் கார்ட்டை பயன்படுத்தி பல இடங்களில் மோசடி செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதைத்தொடர்ந்து, மதுரவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுபாஷை கைது செய்தனர். மேலும், இதுபோன்று ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிவேறு யாரிடமாவது ஏமாற்றி பண அல்லது வேறு ஏதேனும் மோசடி செய்துள்ளாரா என விசாரித்தும் வருகின்றனர். பின்னர் மதுரவாயல் காவல் துறையினர் சுபாஷை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
மேலும் படிக்க: ”எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..” : 6 ஆண்டுகளாக தொடரும் இந்திய டெஸ்ட் அணியின் சாதனை !
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Dhoni New Video: உனக்கென்ன வேணும் சொல்லு... தோனி மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வைரல்..!