இது குறித்து மனோபாலா சாய் வித் சித்ரா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறும் போது, “”ஒரு உண்மையை சொல்றேன். பாட்ஷாவுக்கு நான்தான் டைரக்டர். சத்யா மூவிஸ்- ல என்ன புக் பண்ணி முடிச்சிட்டங்க. ஆனா, வெளிநாட்டுல இருந்து வந்த ரஜினிகாந்த் ஏர்போட்ல சுரேஷ் கிருஷ்ணாதான் டைரக்டர்ணு சொல்லிட்டாரு. இது கேட்ட உடனே எனக்கு ரொம்ப கோபம் வந்துருச்சு. அதே கோபத்தோட ரஜினிகாந்த் வீட்டுக்கு நேரடியா போயி, நான் என்ன சார் தப்பு பண்ணேன்.. நீங்க எப்படி ஒரு டைரக்டர மாத்துலாம்ணு கேட்டேன்.




உடனே அவர் இந்த விஷயத்தை யாரும் எனக்கு சொல்லவே இல்லையே.. பாலசந்தர் சுரேஷ் கிருஷ்ணா ஓகேவான்ணு கேட்டாரு.. அவர் கேக்குறப்ப நான் அதை மறுக்க முடியாதுல்ல.. அதான் ஓகே சொன்னேன். அதுக்கப்புறம் அவங்க மனைவி லதா மோர் கொடுத்து சூட்டை தணிச்சாங்க.. அப்புறம் என்ன ஒட்டறதுதான் ஒட்டும் அப்படின்ணு கிளம்பி வந்தேன்" என்றார். 


களேபரத்தில் முடிந்த கல்யாணம்: 


காதல் வயப்பட்டது குறித்து பேசிய மனோபாலா, “நான் காதலிச்சப் பொண்ணு குடும்பத்துக்கு சினிமானாலே பிடிக்காது. முதல் படமான பிள்ளை நிலா -வ டைரக்ட் பண்ணதுக்கு அப்புறம், காதலியை கல்யாணம் பண்றதுக்காக, அவ வீட்டுக்கு போறேன்.


அவங்க அவங்களோட, நிச்சயதார்த்த பத்திரிக்கையை எனக்கு கொடுத்தாங்க. உடனே அங்கேயே அவளிடம் நான் உனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் காட்றேன்ணு சபதம் போட்டுட்டு, நேரா எங்க அப்பாகிட்ட போயி நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். உடனே எங்க அப்பா, மதுரையில் ஒரு பொண்ணு பார்த்தாரு. ஓகே ஆச்சு.




இதற்கிடையில பத்திர்க்கையாளர்களெல்லாம் போட்டோ எடுக்க வந்துட்டாங்க.. நானும் பொண்ணுக்காக வெயிட் பண்றேன். அவங்க வரவேயில்லை. ரொம்ப நேரம் ஆன உடனே.. கவுண்டமணி நீ ஷூட்டிங் ஸ்பாட்ல ஜீனியர் ஆர்டிஸ்ட தெருவுல பிடிக்கிறமாதிரி, பொண்ணையும் தெருவுலதான் பிடிக்கணும் போல இருக்குணு காமெடி பண்ணார். 


அதுக்கப்புறமா அவங்க வீட்டில போயி பார்த்தா அவங்க முன்னமே வந்து தூங்கிட்டு இருந்தாங்க.. அடுத்த நாள் காலையில கல்யாணம்... கல்யாணம் பண்ணி முடிச்சிட்டு வீட்டுக்கு போறோம். எங்க அப்பா ஹார்ட் அட்டாக்கல விழுந்துட்டாரு. இத பார்த்த என்னோட மனைவியும் மயங்கி விழுந்துட்டாங்க.. அப்படி இப்படினு, பொண்ணுக்கிட்ட போயி பேசுனா அவங்க ஹிந்தியில பேசுனாங்க.. பார்த்தா அவங்களுக்கு தமிழே தெரியாதுனு தெரிஞ்சது.. அப்புறமா கத்துக்கிட்டாங்க” என்றார்.