இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகை கஜோல். பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார். இந்த நிலையில், நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement




கஜோல் அவரது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகள் நைசா புகைப்படத்தை பதிவிட்டு, கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உண்மையில் யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும், தனது மகள் நைசா தேவ்கனை மிகவும் மிஸ் செய்வதாகவும் பதிவிட்டுள்ளார்.






நடிகை கஜோல் பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். பாலிவுட்டின் மிகவும் பிரபல தம்பதிகளான இவர்கள் 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நைசா தேவ்கன், யுக் தேவ்கன் என்ற மகளும், மகனும் உள்ளனர். 1992ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான கஜோல் ஷாரூக்கான், சல்மான் கான் என்று இந்தி திரையுலகின் வெற்றிநாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து பல வெற்றிப்படங்களை அளித்துள்ளார்.




தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் இவர் இணைந்து நடித்த மின்சார கனவே என்ற படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவாகினர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் நடித்திருந்தார். கடைசியாக கஜோல் நடிப்பில் திரிபங்ரா என்ற படம் வெளியானது. தற்போது, கஜோல் நடிப்பில் தி லாஸ்ட் ஹர்ரா என்ற படம் படப்பிடிப்பில் உள்ளது. 


கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கஜோல் விரைவில் நலம் பெற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண