Kamal Haasan Rajinikanth: "எவ்வளவு நாள் ஆச்சி" 21 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே ஸ்டூடியோவில் சந்தித்த ரஜினி, கமல் - உற்சாகத்தில் ரசிகர்கள்!



  • ரஜினியின் 170வது படம் மற்றும் கமலின் இந்தியன் 2 படத்தை  லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கிறது.  இந்நிலையில், இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் நடைபெற்று வருகிறது.  படப்பிடிப்பின்போது ரஜினியும், கமலும் ஒருவரைக்கொருவர் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் படிக்க


Suriya Injured: திடீரென விழுந்த கேமரா.. நடிகர் சூர்யாவுக்கு காயம்.. கங்குவா ஷூட்டிங்கில் விபத்து..!



  • கங்குவா படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வந்தது. இதில் சண்டை காட்சி படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது ரோப்பில் கட்டப்பட்ட கேமரா அறுந்து நடிகர் சூர்யாவின் தோள்பட்டை மேல் விழுந்ததாக சொல்லப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க


Mansoor Alikhan: "த்ரிஷாவை மதிக்கிறேன்.. தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது" காவல்நிலையத்தில் ஆஜரான மன்சூர் அலிகான் பேட்டி!



  • த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில், மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்று அவர் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷாவை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்று காவல் நிலையத்தில் தான் விளக்கம் அளித்ததாக தெரிவித்தார். த்ரிஷாவை நடிகையாக மதிப்பதாகவும், தனது பேச்சு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்ததாக அவர் தெரிவித்தார்.  மேலும் படிக்க


Lal Salaam: ‘இனி எல்லாம் வேற மாதிரி’ .. லால் சலாம் படத்துக்காக களமிறங்கிய கபில்தேவ் ..!




  • லால் சலாம் படம் பொங்கலுக்கு வெளியாகாது என்ற தகவல் வெளியான நிலையில், அதனையெல்லாம் மறுத்த படக்குழு கண்டிப்பாக படம் பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முன்னதாக ரஜினிகாந்த் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசிய நிலையில், தற்போது கிரிக்கெட் வீரர் கபில்தேவ் டப்பிங் பேசும் புகைப்படங்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


    மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்திய கிரிக்கெட்டின் லெஜண்ட் கபில்தேவ் லால்சலாமிற்கு டப்பிங் பேசி முடித்தார்...என்ன ஒரு அனுபவம்” என தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க




Seenu Ramasamy: ‘மனிஷாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தேனா?’ - பிஸ்மி குற்றச்சாட்டுக்கு சீனு ராமசாமி பதிலடி..



  • நேர்காணல் ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி சினிமாவில் பல நடிகர்களும், இயக்குநர்களும் நடிகைகளை மோசமாக தான் பார்க்கின்றனர் என்றும், அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை காரணமாக நடிகைகள் சினிமாவை விட்டு விலகி செல்லவும் அவர்கள் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். குறிப்பாக இளம் நடிகை மனிஷா யாதவ் சினிமாவை விட்டு போனதற்கு இயக்குநர் சீனு ராமசாமி  தான் காரணம் என தெரிவித்துள்ளார். 

  • அவரின் குற்றச்சாட்டுக்கு இயக்குநர் சீனு ராமசாமி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். அவர் தனது பதிவில், ”ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோ”வை பதிவிட்டுளார். மேலும், “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடுடடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க