தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சீனு ரூமுக்குள் சென்று படுத்து கொள்ள மாயா இதை பார்த்து திருடன் என வீட்டையே கலவரமாக்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மாயா - சீனு:
அதாவது, சீனு ஒர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் போது அவனிடம் செல்லும் மாயா டப்பா என்று சொல்லி கலாய்த்து அவனை வெறுப்பேற்றி வம்பிழுக்கிறாள். அடுத்து ரகுராம் மற்றும் ஜானகி பேசி கொண்டிருந்ததை மாயா கேட்டு விட்ட நிலையில் அந்த கடவுளே வந்தாலும் இந்த ரூமை காலி பண்ண மாட்டேன் என்று முடிவெடுக்கிறாள்.
இதனை தொடர்ந்து அவளுக்கு சந்தியா கொடுத்த மெமெரி கார்ட் குறித்து ஞாபகம் வருகிறது, இதை நீங்க என்னுடைய அடுத்த பிறந்த நாளுக்கு தான் பார்க்கணும்ன்னு சொல்லி இருந்தீங்க, ஆனால் அதுவரை என்னால் பொறுத்திருக்க முடியாது. எதுவாக இருந்தாலும் நீங்க என்னுடைய நல்லதுக்காக தான் சொல்லி இருப்பீங்க என்று அதனை பார்க்க முடிவெடுக்கிறாள்.
புவனேஸ்வரி ப்ளான்:
ஆனால் அவளிடம் லேப்டாப் இல்லாத காரணத்தினால் யாருக்கும் தெரியாமல் புவனேஸ்வரி வீட்டிற்கு வருகிறாள். அவளிடம் இது எங்க அம்மா குடுத்த மெமெரி கார்ட், இதுல என்ன இருக்குனு தெரிந்துக்கணும். என்கிட்ட லேப்டாப் இல்ல. எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்கிறாள்.
புவனேஸ்வரி அதை வாங்கி அண்ணன் பையன் பிரபுவிடம் கொடுத்து உன் லாப்டாப்ல போட்டு எடுத்துட்டு வா என்று சொல்லி கண்ணால் சைகை காட்டி அனுப்பி வைக்க பிரபு அதில் இருக்கும் பைலை காபி செய்து கொண்டு வந்து லாப்டாப் ஏதோ ரிப்பேர்ல இருக்கு, என்று சொல்லி மெமரி கார்டை கொடுத்து விடுகிறான்.அதனை தொடர்ந்து புவனேஸ்வரி மாயாவை வைத்து ரகுராம் குடும்பத்தை பழி வாங்க பிளான் போடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.