கல்கி கிருஷ்ண மூர்த்தியின் "பொன்னியின் செல்வன் " நாவலை மய்யமாக வைத்து புராண கதைக்களம் கொண்ட திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் இன்று வெளியானது. டைட்டில் லுக்கில் 2022 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இத்திரைப்படம் 2022-ம் ஆண்டு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. PS -1 என டைட்டில் லுக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இது படத்தின் முதல் பாகம் என்பதும் தெரியவந்துள்ளது. படத்தின் டைட்டில் லுக் போஸ்ட்ரை படக்குழுவினர் தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.






பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம்  ரவி, கார்த்தி, சரத்குமார்,  ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, திரிஷா மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர். கடந்த ஆண்டு இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டது . கொரோனா காரணமாக படப்பிடிப்பு பின்பு நிறுத்தப்பட்டது. 


ABP நாடு Exclusive: ‛வாட்ஸ் ஆப் உளவு... என் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்’ - மே 17 திருமுருகன் காந்தி கொதிப்பு!


இந்த ஆண்டு, கடந்த ஏப்ரல் மாதம், ஹைதராபாத்தில் 50 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வந்ததால் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. படத்தின் 70-வது சதவீதம் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.






கொரோனா காலக்கட்டம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படங்கள் ஓடிடி-ஐ நோக்கி படையெடுத்து வருகிறது. கடந்த வருடம் சிறு படங்களுடன் தொடங்கிய ஓடிடி  தாக்கம் இன்று பெரிய படங்களையும் தன் பக்கம் இழுத்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி நாடுகின்றனர்.


‛வீடியோ கேம்’ தொழிலில் தீவிரம் காட்டும் நெட்ஃபிளிக்ஸ் !


ஆனால், அதிக பொருட் செலவில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் நிச்சயமாக தியேட்டர் ரிலீஸுக்காக காத்திருக்கும் என தெரிகிறது. எனினும், கொரோனா பரவலின் தாக்கம் பொருத்து தியேட்டர்கள் திறக்கப்படுவது பற்றி அரசு முடிவு செய்யும். 


Ajith 61 in Social Media: டிரெண்டாகும் #Thala61 ; போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்?