உலகம் முழுவதும் பயனாளர்களை கொண்டுள்ள ஒடிடி தளம் நெட்ஃபிளிக்ஸ் . 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம்  தொலைக்காட்சி தொடர் மற்றும் படங்களின் வெளியீட்டு உரிமையை பெற்று ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் வீட்டிற்குள் அடைப்பட்டு கிடந்த பலருக்கும் ஒரே ஆறுதல் நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்கள்தான்.  வெளியீட்டிற்காக காத்திருந்த பல முன்னணி நடிகர்களின் படங்களும் கூட நெட்ஃபிளிக்ஸில் வெளியாகின. நெட்ஃபிளிக்ஸை பலர் ஒடிடி தளங்களின் முன்னோடி எனவும் அழைக்கின்றனர். வெறும் ஸ்ட்ரீமிங் தளமாக மட்டுமே இருக்கும் நெட்ஃபிளிக்ஸ் தற்போது வீடியோ கேம் துறையிலும் கால் பதிக்க உள்ளது. நெட்ஃபிளிக்ஸில் வெளியன ’ஸ்ட்ரேஞ்டர் திங்ஸ்’  என்ற பிரபல வெப் தொடரின் மொபைல் கேம் பதிப்பை கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிட்டிருந்தது.அதற்கு கிடைத்த வரவேற்ப்பை தொடந்து  தற்போது  முழு வீச்சில் கேமிங் துறையில் கால் பதிக்க திட்டமிட்டுள்ளது.




 இதற்காக முன்னாள் லக்ட்ரானிக் ஆர்ட்ஸ் மற்றும் பேஸ்புக் நிர்வாகி மைக் வெர்டுவை (Mike Verdu) அதன் வீடியோ கேமிங்  மேம்பாட்டு துணைத் தலைவராக நியமித்துள்ளது நெட்ஃபிளிக்ஸ்.இந்நிலையில் பிரபல ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெட்ஃபிளிக்ஸ் வருகிற 2022 ஆம் ஆண்டில் வீடியோ கேம் துறையில் நுழைவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்றும் முதற்கட்டமாக வீடியோ கேம் துறையில் தனது எல்லைகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது. நெட்ஃபிளிக்ஸ் சில ஆவண படங்கள் மற்றும்  சில குறிப்பிட்ட படங்களை மட்டும் இலவசமாக பார்க்க முடியும். இது நெட்ஃபிளிக்ஸ்  பயனாளர்களை கவர கையாண்ட ஒரு வழிமுறையாகும். இதே போலத்தான் கேமிங் துறையிலும் நுழைய இருப்பதாக கூறப்படுகிறது. குழந்தைகளை மட்டுமல்லாமல் இளைஞர்களையும் குறிவைக்கும் இந்த புதிய திட்டம் ஆரம்பத்தில் இலவச சேவையாக வழங்கப்பட்டாலும் , அடுத்தடுத்து கட்டண சேவையாக மாறலாம் என கூறப்படுகிறது.




நெட்ஃபிளிக்ஸ் ஒடிடி தளமானது கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. மல்டி விண்டோ வசதிகளுடன் வரும் தளத்தில் குழந்தைகளுக்கான தனி பகுதியும் உள்ளது. இதனை பெற்றோர்கள் கட்டுப்படுத்தலாம் .  இதில் குழந்தைகளை கவரும்  படங்கள் மற்றும் கார்டூன்கள் இடம்பெற்றுள்ளன.நெட்பிளிக்ஸ் தற்போது குழந்தைகளுகான இரண்டு சேவைகளை வழங்குகிறது . ஒன்று கிட்ஸ் ரிகேப் இமெயில் வசதி ( Kids Recap Email feature) இதன் மூலம் அவர்களுக்கு பிடித்த படங்கள் , விருப்பமான கதாபாத்திரங்களின் படங்களை பார்ப்பதுடன் அதனை நகல் எடுக்கும் வசதியையும் வழங்குகிறது. மற்றொன்று சிறந்த 10 படங்கள் (Kids Top 10 row) இதன் மூலம் குழந்தைகளுக்கான சிறந்த படங்களை பட்டியலிட்டு காட்டுகிறது. இந்த சேவை 93 நாடுகளில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.