Ajith 61 in Social Media: டிரெண்டாகும் #Thala61 ; போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித்?

ஒரு வழியாக வலிமை பட அப்டேட் வந்திருக்கும் நிலையில், அஜித்தின் 61-வது படம் தொடர்பான தகவல்களை கேட்டும் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Continues below advertisement

நடிகர் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதன்மூலம், இரண்டு ஆண்டு காத்திருப்புக்கு பின் அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யப்பட்டது. ஆனால், மோஷன் போஸ்டரைவிட அடுத்து வெளியான நடிகர் அஜித்தின் ஸ்டில்ஸ் சமூகவலைதளத்தில் வைரலானது, ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்ததாக அமைந்தது.

Continues below advertisement

இந்நிலையில், ஒரு வழியாக வலிமை பட அப்டேட் வந்திருக்கும் நிலையில், அஜித்தின் 61-வது படம் தொடர்பான தகவல்களை கேட்டும் ரசிகர்கள் அவ்வப்போது சமூக வலைதளத்தில் டிரெண்டு செய்து வருகின்றனர். #Thala61 ஹேஷ்டேக் இப்போது டிரெண்டாகி வருகின்றது.

முன்னதாக, அஜித்தின் 61-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. இந்த திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஏற்கெனவே இந்த மூவர் கூட்டணி ‘வலிமை’ படத்தில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

இந்தத் திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் படப்பிடிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகின்றது. எனினும் அப்போது இருக்கும் கொரோனா சூழலை பார்த்து படப்பிடிப்பு தள்ளிப்போகும் வாய்ப்பும் உள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தத் திரைப்படம் வரும் 2022-ஆம் ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வலிமை திரைப்படத்தில் அஜித்துடன், கார்த்திகேயா, ஹுமா குரேஷி, சுமித்ரா, மற்றும் ராஜ் அய்யப்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். வலிமை படத்தை பொருத்தவரை, ஆகஸ்ட் இறுதிக்குள் திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்தில் எஞ்சியுள்ள சில காட்சிகளை விரைந்து முடித்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக இந்த மாதமே படக்குழு கிழக்கு ஐரோப்பியாவுக்கு செல்லவிருக்கிறது. அஜித்தின் சில காட்சிகள் அங்கு படமாக்கப்படவுள்ளது.

அஜித் ரசிகர்கள், பிரதமரின் சென்னை வருகை, சென்னை டெஸ்ட் போட்டி, கால்பந்து போட்டி, இந்தியா - நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் போட்டி, யூரோ கால்பந்து போட்டி என எங்கு பார்த்தாலும், வலிமை அப்டேட் கேட்டு அதகளப்படுத்தினர். இந்நிலையில், அடுத்து படத்திற்கான அப்டேட் பற்றிய கேள்விகளும் சமூகவலைதள பக்கங்களை சுற்ற ஆரம்பித்திருக்கிறது. எந்த அப்டேட்டானாலும் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். 

Ajiths Valimai First Look: வெளியானது ‘வலிமை’ பட போஸ்டர்.. மாஸ் லுக்கில் அஜித்..!

Continues below advertisement