Leo Ticket Booking: விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. சென்னையில் தொடங்கியது லியோ டிக்கெட் முன்பதிவு!

Leo Ticket Booking: வரும் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு லியோ படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Continues below advertisement

Leo Ticket Booking: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு சென்னையில் தொடங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Continues below advertisement

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் வரும் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி ரிலீசாக உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால் லியோ படத்தின் மீதான எதிபார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. இதற்கு மேலாக லியோ படத்தில் த்ரிஷா, அர்ஜூன், கௌதம் மேனன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், மிஸ்கின் என நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். 

கடந்த ஜூலை மாத்தில் இருந்து லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது. ‘நா ரெடிதான்’ மற்றும் பட்டாஸ் பாடல்கள் வெளியாகி டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்தன. இதேபோல் ஒவ்வொரு நடிகர்களின் கிளிம்ப்ஸ் போட்டோக்களும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

இதற்கிடையே லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்தானதால் அப்செட்டில் இருந்து வந்த ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில், டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. 49 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து லியோ படத்தின் டிரெய்லர் தொடர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. இந்த நிலையில் வரும் 19ஆம் தேதி லியோ படம் வெளியாகும் நிலையில் டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே தமிழ்நாட்டின் பிற மாநிலங்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையிலும் முன்பதிவு தொடங்கியுள்ளது. கோவையின் பிரபலமான கேஜி சினிமாஸ், லியோ படத்திற்கான ஆன்லைன் புக்கிங்கைத் தொடங்கியுள்ளது. அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய வேகத்தில் அனைத்து ஷோக்களுக்கான டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக லியோ படத்தின் சிறப்புக்காட்சிகளை வெளியிட கோரி தமிழ்நாடு அரசின் அனுமதிக்கு படக்குழு கேட்டிருந்தது. அதன்படி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. அதன்படி வரும் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு லியோ படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கெனவே லியோ படம் ரிலீசாவதற்கு முன்பாக லண்டன் உள்ளிட்ட நாடுகளில் முன்பதிவு தொடங்கப்பட்டு ப்ரீ புக்கிங்கிலேயே வசூலைக் குவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் படிக்க: Irugapatru: “சிவாஜி தான் என் தாத்தா” .. பள்ளியில் பஞ்சாயத்தான விஷயம்.. இயக்குநர் யுவராஜ் சொன்ன சுவாரஸ்ய தகவல்..!

Zee Tamizh Kudumba Viruthugal: கோலாகலமாக தொடங்கிய ஜீ தமிழ் குடும்ப விருதுகள் பயணம்.. தொடங்கி வைத்த பிரபலங்கள்..!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola