தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக கோலோச்சி வருகிறது ஜீ தமிழ். மற்ற மொழிகளின் மூலம் பிரபலமான சேனலாக விளங்கி ஜீ தமிழ் சின்னத்திரையில் தடம் பதித்து 15 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.


இந்த 15 வருட வெற்றியை கொண்டாடும் வகையில் ஜீ தமிழ் சேனலின் லோகோ உள்ளிட்டவை புதிய பொலிவுடன் புத்துணர்ச்சி பெற்றன, ஜீ தமிழின் இந்த மாற்றம் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் உலக தமிழர்களை ஒன்றிணைக்கும் விதமாக ஜீ தமிழ் குடும்ப விருதுகள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது, இந்த நிகழ்ச்சி தீபாவளி விருந்தாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.


இதற்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்பட்டு மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளது சேனல் நிர்வாகம், இதற்காக ஜீ தமிழ் ரசிகர் ரசிகைகள், பிரபலங்கள், மீடியாக்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் மக்களிடம் இருந்து ஓட்டுக்களை பெறுவதற்கான வேலைகள் தொடங்கி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் 2 பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வாகனத்தில் 3000 கிலோ மீட்டர் மேல்  பயணம் செய்து கிட்டத்தட்ட 20 லட்சம் மக்களை நேரில் சந்தித்து ஒட்டு சேகரிக்க உள்ளனர். ஒரு வாகனம் திருச்சியில்  இருந்தும் இன்னொரு வாகனம் தமிழக கடைக்கோடி பகுதியான கன்னியாகுமரியில் இருந்தும் தனது பயணத்தை தொடங்க உள்ளது.


இந்த ஒட்டு சேகரிப்பு பயணமானது அக்டோபர் 12-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை ஜீ தமிழ் அலுவலகத்தில் தொடங்கியது. அர்ச்சனா ஆங்கரிங் செய்ய ஜீ தமிழ் பிரபலங்கள், முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள், ரசிகர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கொடி அசைத்து இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஜீ தமிழின் இந்த புதிய முயற்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் பகுதிக்கு உங்களை தேடி வரும் எங்களிடம் உங்களின் ஓட்டுக்களை பதிவு செய்ய நீங்களும் தயாராகுங்கள். மனதால் இணைந்து மாற்றத்தை வரவேற்கலாம் வாங்க.