தனுஷ் இயக்கி நடித்த ராயன் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி கலவயான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படத்தைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழியில் உருவாகியிருக்கும் குபேரா படத்தில் நடித்துள்ளார் தனுஷ் . இப்படத்தின் மூலம் நேரடியாக தெலுங்கு சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார் தனுஷ்.
குபேரா டீசர்
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் , நாகர்ஜூனா , ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் குபேரா . வரும் ஜூன் 20 ஆம் தேதி தமிழ் , இந்தி , தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது, நீண்ட நாட்களாக கமர்சியல் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த தனுஷ் இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்துள்ளது படத்தின் மீது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பணத்தை மையமாக வைத்து நகரும் இந்த படம் தனுஷ் நடிப்பிற்கு தீனி போடும் கதையம்சமாக அமைந்துள்ளது என தனுஷ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்
அடுத்தடுத்து படங்களை கையில் வைத்திருக்கும் தனுஷ்
குபேரா படத்தைத் தொடர்ந்து தனுஷ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தியில் தேரே இஷ்க் மே படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி , தமிழரசன் பச்சமுத்து , அருண் மாதேஸ்வரன் , மாரி செல்வராஜ் ஆகிய இயக்குநர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார் தனுஷ். தனுஷின் மற்றொரு படத்தின் அப்டேட் சமீபத்தில் சர்வதேச கான் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டது. இதன்படி மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி மற்றும் விஞ்ஞ்சானி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் நடிக்க இருக்கிறார். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.