பாலிவுட் நடிகைகளான கரீனா கபூர் மற்றும் அம்ரிதா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் இருவரும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் விருந்துகளில் கலந்து கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து நடவடிக்கை எடுத்த மும்பை மாநகராட்சி மும்பை பந்தரா பகுதியிலுள்ள அவரது வீட்டிற்கு சீல் வைத்துள்ளது.
இது குறித்து மும்பை மாநகராட்சி குறிப்பிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி, “ கரீனா கபூரின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்போது வரை அவர் ஒழுங்கான தகவல்களை தரவில்லை. இருப்பினும் அதிகாரிகள் அவருடன் நெருங்கிய பழங்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கரீனா கபூர், “ நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி நான் என்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்." என்று கூறியுள்ளார்.
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசிய கரீனா கபூரின் தந்தை, கடந்த ஞாயிற்றுக் கிழமை கரீனாவிற்கு லேசான காய்ச்சல் மற்றும் உடல்வலி இருந்த நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் தனது குழந்தைகளுடன் இருக்கிறார்” என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்