செங்கல்பட்டில் தனியார் திருமண மண்டபத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களின் உதவியாளர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று இரவு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பத்திற்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மாநில தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் 2017 ஆம் ஆண்டு முதல் நடைபெறாமல் இருக்கும் நிர்வாகப் பயிற்சி நில அளவை பயிற்சி ஆகியவற்றை அளிக்க வேண்டும் . நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தலின் போதும் பணியாற்றிய ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு இதுவரை பணம் செலுத்தப்படவில்லை, அவர்களுக்கு உடனடியாக நிலுவை தொகையை வழங்க வேண்டும். மேலும் நலத்திட்ட உதவிகள் பொருட்கள் வரும்போது குறிப்பாக புடவை, வேஷ்டி, சேலை, ஆகியவை பொருட்கள் வரும்போது அவற்றை கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் சுமக்க வேண்டிய நிலை உள்ளது அதை மாற்ற வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பிடிக்கும் சிபிஎஸ் தொகை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது அவை உடனடியாக துவங்க வேண்டும். கொரானா வைரஸ் தொற்று காலத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தில் பிரதிநிதிகள் கூறுகையில், அதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பலவிதமான கணக்கெடுப்புகள் எடுக்கச்சொல்லி அழுத்தம் வருகிறது ஆனால் அதற்கெல்லாம் பல அமைப்புகள் இருந்தாலும் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பணி செய்யுமாறு வருத்தப்படுகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்கள் அந்த பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை கண்காணிக்க வேண்டும் என ஒரு உத்தரவு வந்துள்ளது. நகராட்சி ஆகிய பகுதிகளில் மாடுகள் சுற்றி திரிந்தால் அதை பிடிப்பது வழக்கம் ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் அதை எவ்வாறு கண்காணிக்க முடியும். மாடுகளை அவர்கள் கண்காணித்தால் அவர்கள் இருக்கும் பணிகளை எப்படி செய்வார்கள்.
இது போன்ற தன்னிச்சையாக செயல்படுவது சரி இல்லை என தெரிவித்தனர். மேலும் புரிதல் இல்லாமல் தங்களிடம் வேலை வாங்கி வருவதாக குற்றம்சாட்டினார். பல்வேறு துறைகளில் செய்ய வேண்டிய வேலைகளை அனைத்தையும் கிராம நிர்வாக அலுவலர்களும் கூறுவது சரியில்லை என கூறினார். ஒரு பிரச்சனையை தீர்க்க தெரியாமல் அனைத்திற்கும் கிராம நிர்வாக அலுவலரை பார்க்க வேண்டும் என திருப்பி அனுப்புவது சரி அல்ல என தெரிவித்தார். தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்து இருக்கும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும் இல்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தனர்
மேலும் படிக்க...
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்