தீபாவளி போட்டியிலிருந்து வெளியேறினார் சிவகார்த்திகேயன்.. அயலான் ரிலீஸ் தேதி இதுதான்!


சிவகார்த்திகேயன் நடித்து ரவிக்குமார் இயக்கியிருக்கும் திரைப்படம் அயலான். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  ஃபேண்டசி திரைப்படமாக உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம், நீண்ட நாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் திரைப்படமாகும். முன்னதாக தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அதிகார்ப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் படிக்க


இப்படி சாந்த சொரூபினியா மாறிட்டாரே... ராஷ்மிகா மந்தனாவின் ‘அனிமல்' பட லுக் இதுதான்!


அர்ஜூன் ரெட்டி பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், ரன்பீர் கபூர்  நடித்துள்ள அனிமல் திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனாவின் லுக் வெளியாகி இருக்கிறது. அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடித்திருக்கும் திரைப்படம் அனிமல். ராஷ்மிக மந்தனா இந்தப் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மேலும் படிக்க


கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.. அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்.. குஷியில் தனுஷ் ரசிகர்கள்!


கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்து தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தனுஷ்  நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  பிரியங்கா மோகன் இப்படத்தில் நாயகியாக நடிக்க, ஜான் கொக்கன், சிவராஜ் குமார், நிவேதிதா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். மேலும் படிக்க


4 ஆண்டுகள்.. 200 படங்கள்.. தென்னிந்திய சினிமாவின் நிரந்தர கனவு நாயகி சில்க் ஸ்மிதா நினைவு தினம்!


நம்மை நாமாக ஏற்றுக்கொள்ளும் நாளில்தான் நாம் ஆளுமையாகிறோம். ஆண்களின் ஓவர் ஹீரோயிசத்தால் அலுத்துப்போன காலத்தில் தென்னிந்திய சினிமா கண்ட அப்படியானதொரு ஆளுமையின் இருபத்து ஏழாவது நினைவுதினம் இன்று. சில்க் ஸ்மிதா... பெண்கள் உடல் தெரிய உடை அணிந்தால் அவள் ஒழுக்கம் கெட்டவள், கிளாமராகத் தெரிந்தால் அவள் பாலியல் தொழில் செய்பவள், பல ஆண்களுடன் தொடர்புடையவள் என அடுக்கடுக்காக ஒருத்தியின் குணத்தை அறுவை சிகிச்சை செய்யும் சமூகத்தில், “என் உடல்தான் என் ஆயுதம்” என அதே சாடித் திரியும் சமூகத்தை சினிமாவின் மூலம் தன் காலடியில் கிடக்க வைத்தவர். மேலும் படிக்க


வந்தது விடிவு காலம்..! நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது விக்ரமின் ”துருவ நட்சத்திரம்” திரைப்படம்


நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம், நவம்பர் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார்.  படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகமல் இருந்த இப்படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி சிறிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். அதில் பல்வேறு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் படிக்க