சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் அயலான் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
அயலான்
கடந்த 2015 ஆம் வருடம் இன்று நேற்று நாளைத் திரைபபடத்தை இயக்கிய இயக்குநர் ரவிக்குமாரின் இரண்டாம் படைப்பாக உருவாகி இருக்கும் திரைப்படம் அயலான். டைம் டிராவலை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய ரவிக்குமார் ஒரு புதுவிதமான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது படத்தையும் ஏலியன் ஃபேண்டசித் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார் ரவிக்குமார். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக ரகூல் ப்ரீத் கதாநாயகியாக நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வரும் திரைப்படமாகும். இதனிடையில் படத்தின் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் அதிக காலம் தேவைப்பட்டதாக படக்குழு சார்பாக கூறப்பட்டது.
முன்னதாக தீபாவளி அன்று இப்படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என அதிகார்ப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
போட்டியில் இருந்து விலகிய சிவகார்த்திகேயன்
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியாக இருக்கின்றன.
ஜப்பான்
ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள திரைப்படம் ஜப்பான். அனு இமானுவேல் கதாநாயகியாக நடிக்க ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் . இந்த ஆண்டு திபாவளி வெளியீடாக ஜப்பான் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான டப்பிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் கார்த்தி.
ஜிகர்தண்டா 2
கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான படம் “ஜிகர்தண்டா” . இந்த படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, அம்பிகா, சங்கிலி முருகன், கருணாகரன், விஜய் சேதுபதில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். எஸ்.ஜே சூரியா, ராகவா லாரண்ட் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் டீசர் முந்தைய பாகத்திற்கு நிகரான எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மீது ஏற்படுத்தி இருக்கிறது. தீபாவளி அன்று திரையரங்குகளுல் வெளியாக இருக்கிறது ஜிகர்தண்டா.
துருவ நட்சத்திரம்
விக்ரம் , சிம்ரன், ரிது வர்மா, ஐஷ்வர்யா ராஜேஷ் ,ராதிகா உள்ளிட்டவர்கள் நடித்து கெளதம் மேனன் இயக்கியிருக்கும் திரைப்படம் துருவ நட்சத்திரம் . ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.வருகின்ற நவம்பர் 24 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.
இந்தப் படங்களுடன் போட்டியிட இருந்த அயலான் திரைப்படம் தற்போது போட்டியில் இருந்து விலகி பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது. பா.ரஞித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கு தங்கலான் திரைப்படம் அதே சமயத்தில் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளதால் விக்ரம் படத்துடன் சிவகார்த்திகேயனின் அயலான் போட்டியிடும் என்று எதிர்பார்க்கலாம்