சர்ச்சையைக் கிளப்பிய லியோ ட்ரெய்லர்..
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் பார்த்ததும் விஜய் என்ன சொன்னார் என்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் லலித் குமார் வெளிப்படுத்தியுள்ளார். அடுத்த நாள் (அக்டோபர் 2) காலையில விஜய் சார் ட்ரெய்லர் பார்த்தாரு. அவருக்கு ரொம்ப பிடிச்சி போச்சு. விஜய்கிட்ட அதை வெளிப்படையா பார்க்க முடியாது என்பதே உண்மை. ஓகே..ஓகே.. என சொல்லிவிட்டு சென்றார். மேலும் இந்த படத்துக்காக லோகேஷ் அவ்வளவு கஷ்டப்பட்டார். முதல் நாள் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றபோது ஷூட்டிங் போவாமா என கேட்டார். மேலும் வாசிக்க..
சந்திரமுகி-2 ஓடிடி ரிலீஸ்
வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் மதம் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. 2005ம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட படத்திற்கு நல்ல விமர்சனம் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. காமெடி, ஆக்ஷன், பாடல், கதை, த்ரில்லர் என அனைத்திலும் ஸ்கோர் செய்த சந்திரமுகி படம் எவர்கிரீன் படமாக இருந்து வருகிறது. மேலும் வாசிக்க..
விஜய் ஆண்டனியின் சைலண்ட் ட்ரீட்மென்ட்.. ரத்தம் படம் விமர்சனம் இதோ..!
தீவிரமான ஒரு சமூக பிரச்சனையை சுவாரஸ்யமான ஒரு படமாக மாற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சாதி, மதம், மொழி, வர்க்கம் , அதிகாரம் , கோபம் என பல காரணங்களுக்காக மனிதர்கள் கொலை செய்கிறார்கள். ஆனால் இந்த கொலைகளை அவர்கள் தானாக செய்கிறார்களா? இல்லை குற்றவாளிகளாக இருக்கும் அவர்களே யாரோ ஒருவரின் சுயலாபத்திற்காக பயன்படுத்தப்படும் பலியாடுகளா? என்பதே இப்படத்தின் கதையாகும். மேலும் படிக்க
“திருமணமானவர்கள்.. காதலிப்பவர்கள் பார்க்க வேண்டிய படம்” .. இறுகப்பற்று படத்தின் முழு விமர்சனம் இதோ..!
காலங்கள் மாறிவிட்ட இவ்வுலகில் காதல் எவ்வளவு எளிது என்ற நிலையை அடைந்து விட்டதோ, அதேபோல் பிரேக் அப், விவாகரத்து உள்ளிட்ட சம்பவங்களும் சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. வார்த்தைப்போர் தொடங்கி உடல் ரீதியான தாக்குதல், தம்பதிகளுக்குள் சண்டையே வராமல் இருப்பது உள்ளிட்ட பல காரணங்களை சொல்லி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடுபவர்களின் செய்தியை நாம் தினமும் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். இவை அனைத்திற்கும் மிக அழகாக விடை சொல்லியிருக்கிறது “இறுகப்பற்று” படம்..! மேலும் படிக்க
சந்திரமுகி 2 ஓடிடி ரிலீஸ்
வாரவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் பார்த்ததை விட ஓடிடியில் தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. ஒருமுறைக்கு பலமுறை பார்க்கும் வகையில் காமெடி எமோஷன் கலந்த மாதிரியான படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைப்பது ஒரு நல்ல நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம். மேலும் வாசிக்க..
ரோகிணி திரையரங்கம் சேதனமான விவகாரம்
லியோ டிரெய்லர் வெளியான போது ரோகிணி திரையரங்கம் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு போலீசாரின் தவறான கையாளுதலே காரணம் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேலம் மற்றும் கிருஷணகிரி மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணையில், லியோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி திரையரங்கு சேதபடுத்தப்பட்டதற்கு காவல்துறையின் தவறான அணுகுமுறையே காரணம் என்ற நீதிபதி, பார்க்கிங்கில் ஸ்கிரீன் அமைத்து டிரெய்லரை ரிலீஸ் செய்திருந்தால் பிரச்சனை வந்திருக்காது என்றார். மேலும் வாசிக்க..
முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! -800 விமர்சனம்
800 திரைப்படத்தில் தொடக்கத்தில் கிரிக்கெட் விளையாட்டானது எப்படி உருவானது என்று இயக்குநர் வெங்கட்பிரவு குரலில் ஒலிக்க தொடங்கி, அதன் ஆதிக்கம் எப்படி பரவியது என்பதை படம் தொடங்குவதற்கு முன்பாகவே சொல்லப்பட்டு விட்டது. அதன் தொடர்ச்சியாக, முத்தையா முரளிதரனின் தாத்தா சின்னசாமி, பாட்டி அங்கம்மாள் இந்தியா அடிமைப்பட்டு கிடந்தப்போது, ஆங்கிலேயர்களால் தேயிலை தோட்ட பணிக்காக கொத்தடிமைகளாக சிலோனுக்கு (இன்றைய இலங்கை) அழைத்து வரப்படுக்கிறார்கள். அப்போது, இலங்கையும் அடிமைப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் வாசிக்க..