Upcoming OTT Release This Week: வாரவாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களில் எண்ணிக்கை அதிகரித்துதான் வருகிறது. சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் பார்த்ததை விட ஓடிடியில் தான் அதிகம் பார்க்கப்படுகின்றன. ஒருமுறைக்கு பலமுறை பார்க்கும் வகையில் காமெடி எமோஷன் கலந்த மாதிரியான படங்களுக்கு ஓடிடி தளங்களில் நல்ல வரவேற்பு கிடைப்பது ஒரு நல்ல நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்.


OMG 2


அக்‌ஷய் குமார், பங்கஜ் திரிபாதி நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் ஓ.எம்.ஜி 2. முதல் பாகம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பாலியல் கல்வி குறித்தான அவசியத்தை நகைச்சுவை கலந்த ஒரு படமாக எடுக்கப்பட்டிருக்கும் படம் . வருகின்ற அக்டோபர் 8 ஆம் தேதி  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.


கூஃபியா


பாலிவுட்டின் இளம் இயக்குநர்களில் ஒருவரான விஷால் பரத்வாஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் கூஃபியா. தபூ வமிகா கபி உள்ளிட்டவரகள் நடித்துள்ள இந்தப் படம் வருகின்ற அக்டோபர் 5 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.


தி நன் 2 (The Nun 2)


ஹாலிவுட் ஹாரர் திரைப்படங்களில் மிக புகழ்பெற்ற பிராஞ்சைஸ் நன் படவரிசை. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி தி நன் இரண்டாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியது. தற்போது அமேசான் பிரைமில் நன் படத்தை தற்காலிக வாடகை முறையில் பார்க்கலாம்.


A Deadly Invitation


ஹோசே மானுவல் இயக்கியிருக்கும் திரைப்படம் ஏ டெட்லி இன்விடேஷன். சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்புகள் இருக்கும் படம். வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி அதாவது இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. 


நீ வெண்டே நேனு


பாலசுப்ரமணியம் மொடுபள்ளி, ஸ்னேஹா உள்ளிட்டவர்கள் நடித்து அன்வர் இயக்கியிருக்கும் தெலுங்குத் திரைப்படம் நீ வெண்டே நேனு. காதல் கதையாக உருவாகி இருக்கும் இந்தப் படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி சினி பஜார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.


மெலடி டிராமா (கன்னடம்)


மஞ்சு கார்த்திக் இயக்கத்தில் சத்யா ஷ்ரயா மற்றும் சுப்ரிதா சத்ய நாராயணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெல்டி டிராமா. கிரண் ரவிந்திரநாத் இசையமைத்திருக்கிறார். வருகின்ற அக்டோபர் 6 ஆம் தேதி நம்ம ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.


மும்பை டைரீஸ் (இந்தி)


மோகின் ரயினா, நடாஷா பரத்வாஜ் ஷ்ரெயா தன்வந்தரி, டினா தேசாய் உள்ளிட்டவர்கள் நடித்து வெளியானத் திரைப்படம் மும்பை டைரீஸ். முதல் சீச்சன் வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசன் இன்று வெளியாகி இருக்கிறது.


மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி


  நவீன் பொலிஷெட்டி மற்றும் அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானத் திரைப்படம் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி. தற்போது தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளில்  நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கிறது.


மிஸ்டர் பிரெக்னண்ட்


ஸ்ரீனிவாஸ் விஞ்சனம்பட்டி இயக்கத்தில் ரூபா கொடுவாயூர், சையத் ரையன் , சுஹாசினி மனிரத்னம் உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் திரைப்படம் மிஸ்ஸ்டர் பிரெக்னண்ட். அக்டோபர் 6 முதல் ஆஹா தெலுங்கு மற்றும் தமிழில் பார்க்க கிடைக்கிறது.


பார்ட்னர்


ஹரிஷ் கல்யான் நடித்து உருவாகி இருக்கும் திரைப்படம் பார்ட்னர். அக்டோபர் 6 ஆம் தேதி முதல் சிம்ப்ளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.


ALSO READ: 800 Movie Review: முரளிதரனின் வாழ்க்கை வரலாறு! 800 படத்தில் கறைந்தது ரசிகர்களின் மனமா..? பணமா..? ஒரு டி20 விமர்சனம்!