Chandramukhi2: வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி2 நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் மதம் வெளியாகும் என்ற தகவல் கசிந்துள்ளது.


2005ம் ஆண்டு ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட படத்திற்கு நல்ல விமர்சனம் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. காமெடி, ஆக்‌ஷன், பாடல், கதை, த்ரில்லர் என அனைத்திலும் ஸ்கோர் செய்த சந்திரமுகி படம் எவர்கிரீன் படமாக இருந்து வருகிறது. 


இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சந்திரமுகி 2 படம் தற்போது ரிலீசாகியுள்ளது. பி. வாசு இயக்கியுள்ள சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத், லஷ்மி மேனன், மகிமா நம்பியார், ராதிகா, வடிவேலு என பலர் நடித்துள்ளனர். இதில் சந்திரமுகியாக கங்கனா நடித்து அசத்தியுள்ளார். படம் ரிலீசாவதற்கு முன்பாக வெளியான பாடலும், கிளிம்ப்ஸ் வீடியோக்களும் நல்ல வரவேற்பை பெற்றன. மிலாடி நபி, ஞாயிறு, காந்தி ஜெயந்தி என விடுமுறை நாட்களில் சந்திரமுகி2 ரிலீசானதால் பாக்ஸ் ஆபிசில் ரூ.35 கோடிக்கும் மேல் வசூலானதாக கூறப்படுகிறது. 


சந்திரமுகி2 படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கடந்த 28ம் தேதி சந்திரமுகி 2 ரிலீசானது. படத்துக்கு கலவையான விமர்சனங்கள் பெற்றிருந்தாலும் வசூலில் வெற்றியை தருவதாக கூறப்படுகிறது. எனினும் முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் இல்லை என பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த சூழலில் சந்திரமுகி2 படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.


சந்திரமுகி2 படத்தின் ஓடிடி நிறுவனம் கைப்பற்றி இருப்பதாக கூறப்படுகிறது. படம் தற்போது தான் ரிலீசாகி இருப்பதால், நவம்பரில் ஓடிடி தளத்தில் சந்திரமுகி 2 ரிலீசாகும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, நவம்பர் 10ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் சந்திரமுகி 2 வெளியாகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. 



 


மேலும் படிக்க: LEO Trailer Record: வெளியான ஐந்தே நிமிடங்களில் அசத்தல் சாதனை படைத்த லியோ ட்ரைலர்! - ரசிகர்கள் குதூகலம்


Leo Trailer: தயார் நிலையில் நிற்கும் விஜய்... லியோ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரம் இதுதான்!