Ravindar Chandrasekaran: ரூ.16 கோடி மோசடி வழக்கில் கைதான ரவீந்தர் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


லிப்ரா ப்ரொடெக்சன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ரவீந்தர் சந்திரசேகர் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து பிரபலமானார். இருவரது புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி டிரெண்டானது. தொடர்ந்து சமூக வலைதளத்தில் மனைவியுடன் வீடியோக்களை பகிர்ந்து வந்த ரவீந்தர் சந்திரசேகர் அண்மையில் முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடினார். 


இந்த நிலையில் கடந்த மாதம் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ரவீந்தருக்கு எதிராக பாலாஜி கபா பண மோசடி புகாரை அளித்தார். அதில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தை தான் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்காக ரூ.200 கோடி செலவாகும் என்றும், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் கூறியதாகவும், அதனை நம்பி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்துக்கு ரூ. 16 கோடி கொடுத்ததாகவும் கூறியுள்ளார். ஆனால், இந்த பணத்தை போலி ஆவணங்களை காட்டி ரவீந்தர் பெற்றதாகவும், சொன்னபடி திட்டத்தை ஆரம்பிக்காததால் பணத்தை திருப்பி கேட்டதற்கு தராமல் ஏமாற்றி வருவதாகவும் புகாரில் கூறப்பட்டிருந்தது. 


இதனால் ரவீந்தர் சந்திரசேகருக்கு எதிராக நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட ரவீந்தர் சந்திரசேகரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவீந்தர் சந்திரசேகர் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திக்கேயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


காவல்துறை தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, ரவீந்தர் வங்கி கணக்கு பண பரிவத்தனை தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டதுடன், 2 வாரங்களில் 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த உத்தரவிட்டு ஜாமீன் வழங்கினார். முன்னதாக காவல்துறை தரப்பில் நடத்தப்பட்ட விசாரணையில் திடக்கழிவு திட்டத்தில் ஆசை வார்த்தை கூறி பாலாஜியிடம் இருந்து ரூ.16 கோடி ரவீந்தர் பெற்றது தெரிய வந்தது. கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜரான ரவீந்தர், பாலாஜியிடம் வாங்கிய பணத்தில் ரூ.2 கோடியை திருப்பி கொடுத்ததாக கூறினார். அதேநேரம் பாலாஜி தரப்பில், ரவீந்தர் எந்த பணத்தையும் தரவில்லை என கூறப்பட்டது. இருவரும் மாறி, மாறி பணம் கொடுதத்தாக கூறுவதால், ரவீந்தரின் வங்கி பண வர்த்தனைகள் சோதனையிடப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க: Leo Trailer: சர்ச்சையை கிளப்பிய லியோ ட்ரெய்லர்.. குவியும் கண்டனங்கள்.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?


Leo Trailer: ”லியோ” படக்குழுவுக்கு ஏன் இப்படி ஒரு விளம்பரம்..! டிரெய்லரில் விஜய் - லோகேஷ் கனகராஜ் செய்தது நியாயமா?